கார்த்தி - தமன்னா நடிப்பில் வெளியாகி ஹிட் திரைப்படம் ‘பையா’ தமிழ்நாடு முழுவதும் விரைவில் ரீ-ரிலீஸ் செய்யப்படும் என திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 


 திரையரங்குகளில் படம் பார்ப்பதே தனி இனிமை. ஒவ்வொருவருக்குமான தனி ரசனையை தாண்டி எல்லாருக்கும் மனத்துக்கு நெருக்கமான பிடித்துப்போன திரைப்படம் எந்த காலத்திலும் கொண்டாடப்படும் ஒன்றாக இருந்து வருகிறது. ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படங்களை, நடிகர்களின் பிறந்தநாள் அல்லது வேறு சில காரணங்களுக்காக ரீ-ரிலீஸ் செய்வது வழக்கம். அப்படி, கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் மறு-வெளியீடு செய்யப்பட்ட படங்கள் நிறையவே உள்ளன. பாபா, 3, மயக்கம் என்ன, வாரணம் ஆயிரம், வள்ளவன், ஆளவந்தான், விண்ணைத்தாண்டி வருவாயா, வேட்டையாடு விளையாடு, முத்து ஆகிய படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டன. இதற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பும் கிடைத்தது. 


ரீ-ரிலீஸ் ஆன திரைப்படங்களில் 3,  வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா? பல நாட்களாக திரையரங்குகளில் உற்சாகத்துடன் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


பையா ரீ-ரிலீஸ்


லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி- தமன்னா நடிப்பில் 2010-ல் வெளியானது ‘பையா’. வெளியான சில நாட்களுக்கு படம் பெரிதாக ரசிகர்களை ஈர்க்கவொல்லை என்னும் விமர்சனத்தைச் சந்தித்தது. ஆனால், அதன்பிறகு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. யுவர் சங்கர் ராஜா இசையில் ஃபேவரைட் ஆல்பம், புதுவிதமான கதை என எல்லாருக்கும் மிகவும் பிடித்திருந்தது. 




க்ளாசிக் படமான பையா விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கொண்டாட தயாராகுங்கள்.



வழக்கமான காதல் கதை தான்.  இயக்குநர் அப்படத்தை நகர்த்திய விதம் மிகவும் இம்ப்ரெஸ்ஸிங்காக இருந்ததால் ரசிகர்கள் 'பையா' படத்தை கொண்டாடினார்கள். கார்த்தி - தமன்னா ஆன் ஸ்கிரீன் ப்ரசென்ஸ் மிகவும் அற்புதமாக ஃப்ரெஷாக அமைந்திருந்தது கூடுதல் பிளஸ் பாயிண்டாக அமைந்தது. பார்த்தவுடன் ஹீரோயின் மீது காதல் வசப்படும் ஹீரோ, இருவரும் சேர்ந்து பெங்களுரிலிருந்து மும்பைக்கு பயணம் செல்வது என கதை மிகவும் ஸ்வாரஸ்யமாக நகர்த்தப்பட்டு இருந்தது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் A1 ரகம். இன்றும் அனைவரின் பிளே லிஸ்டில் அப்பாடல்கள் நிச்சயம் இடம் பெற்றுஇருக்கும். யுவனின் பெஸ்ட் எவர் பாடல்களை கொண்ட படம் பையா எனலாம்.