பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் இரண்டாவது போட்டியாளராக உள்ளே நுழைந்த யூட்யூபர் பூர்ணிமா ரவி பற்றி இந்த தொகுப்பில் காணலாம். 


பிக்பாஸ் நிகழ்ச்சி 


பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் இன்று கோலாகலமாக  தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி 2024 ஆம் ஆண்டு ஜனவரி 14 அல்லது 21 ஆம் தேதி வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியை 7வது ஆண்டாக கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதில் முதல் போட்டியாளராக நடிகர் கூல் சுரேஷ் பங்கேற்ற நிலையில் 2வது போட்டியாளராக உள்ளே வந்தார் பிரபல யூட்யூபர் பூர்ணிமா ரவி. 


உள்ளே வந்த உடனே கூல் சுரேஷூம், பூர்ணிமா ரவியும் பரஸ்பரம் தங்களை அறிமுகம் செய்துக் கொண்டார்கள். தொடர்ந்து ம் இருவரும் முன்பே சந்தித்து இருக்கிறோம் என பூர்ணிமா சொல்ல, அப்படியா என ஆச்சரியத்தோடு கூல் சுரேஷ் கேட்டார். உடனே, காரில் சென்று கொண்டிருந்த என்னை வழி மறித்து பேசினீர்கள் என்ற குண்டை தூக்கி போட கூல் சுரேஷ் அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து ஒரு படத்தில் நடித்த நடிகை என நினைத்து வழி மறித்ததாக கூறி சமாளித்தார் கூல் சுரேஷ். இப்படியான நிலையில் பூர்ணிமா ரவி பற்றி காணலாம். 






பூர்ணிமா ரவி 


வேலூரைச் சேர்ந்த பூர்ணிமா ரவி சொந்த ஊரிலேயே பள்ளி படிப்பை முடித்துவிட்டு விஐடி கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் ஐடி கம்பெனி ஒன்றில் வேலை பார்த்த அவருக்கு நடிப்பு மீது ஆர்வம் இருந்ததால் அராத்தி  என்ற யூட்யூப் சேனலை தொடங்கி பிரபலமானார். அந்த சேனலில் தனது நடன வீடியோக்க பதிவேற்றிய அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக பக்கத்து வீட்டு பெண் போல் இருப்பதாக ரசிகர்கள் அவரது வீடியோவில் கருத்து தெரிவிப்பது வழக்கம். 


தொடர்ந்து யூட்யூப்பில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து குறும்படங்களில் நடிக்க தொடங்கினார். அதன்படி 
டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமான ஹே சண்டைக்காரி உள்ளிட்ட வெப் சீரிஸ்களிலும் நடித்தார். அதன் மூலம் பூர்ணிமா ரவிக்கு ப்ளான் பண்ணி பண்ணனும் படத்தின் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் நடிகர் பால சரவணனின் தங்கையாக நடித்திருந்தார். இதனடிப்படையில் தான் பூர்ணிமா ரவி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படியான நிலையில் அவருக்கு பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி பூர்ணிமா ரவிக்கு கைக்கொடுக்குமா என்பதை எதிர்பார்த்து தான் காத்திருக்க வேண்டும். 




மேலும் படிக்க:  Bigg Boss 7 Tamil LIVE: பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது போட்டியாளராக வந்த நடிகர் பிரதீப் ஆண்டனி