= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Bigg Boss 7 Tamil LIVE: அறிமுகம் முடிஞ்சது.. கேப்டனாகத் தேர்வான விஜய்.. நாளை முதல் களேபரம் தொடங்குமா? பிக் பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களையும் கமல்ஹாசன் அறிமுகப்படுத்தி முடித்துள்ளார். முதல் போட்டியாளர் வந்தது முதலே கேப்பிடன்ஸி டாஸ்க் கொடுத்து பிக்பாஸ் கொளுத்திப் போடும் வேலையை தொடங்கி வைத்த நிலையில், இறுதியாக வந்த விஜய் இந்த வார கேப்டனாக நோகாமல் தேர்வாகியுள்ளார்.
ஜாலியான குடும்பமாக அன்பு பொங்க இன்று போட்டியாளர்கள் கமல் உடன் உரையாடி வருகின்றனர் போட்டியாளர்கள்.. ஆனால் இரண்டு வீடுகளாக ஏற்கெனவே டிசைன் பண்ணியதற்கு ஏற்ப, வீடு நாளை முதல் ரெண்டாகுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்!
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Bigg Boss 7 Tamil LIVE: பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி..இறுதி போட்டியாளராக உள்நுழைந்த விஜய் வர்மா பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இறுதி போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார் நடனக் கலைஞர் விஜய் வர்மா.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Bigg Boss 7 Tamil LIVE: பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி..17 வது போட்டியாளராக உள்ளே வந்த அனன்யா பிக்பாஸ் சீசன் 7 வீட்டில் 17 ஆவது போட்டியாளராக உள்ளே வந்திருக்கிறார் வளர்ந்து வரும் மாடலான அனன்யா.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Bigg Boss 7 Tamil LIVE: பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி...16 ஆவது போட்டியாளராக உள்ளே வந்த கதைசொல்லி பவா செல்லத்துரை பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் 16 ஆவது போட்டியாளராக எழுத்தாளர் மற்றும் கதைசொல்லியாக அறியப்படும் பவா செல்லத்துரை பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். பல்வேறு புத்தகங்களை மட்டும் இல்லாமல் ஜோக்கர், ஜெய் பீம் உள்ளிட்டத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Bigg Boss 7 Tamil LIVE: பிக்பாஸ் வீட்டில் 15 ஆவது போட்டியாளராக எண்ட்ரி கொடுத்த நடிகை விசித்திரா பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் 15 ஆவது போட்டியாளராக பிக்பாஸ்ஸ் வீட்டில் நுழைந்துள்ளார் நடிகை விசித்திரா. 90 களில் வெளியானத் திரைப்படங்களில் பெரும்பாலான பிரபல நடிகர்களின் படத்தில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்தவர் நடிகை விசித்திரா.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Bigg Boss 7 Tamil LIVE: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி...14 ஆவது போட்டியாளராக அறிமுகமாகிய மலேசியா வாசுதேவனின் மகன் பிக் பாஸ் சீசன் 7 வீட்டில் 14 ஆம் போட்டியாளராக நுழைந்திருப்பது பிரபல பாடகர் மலேசியா வாசுதேவனின் மகனான யுகேந்திரா வாசுதேவன்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Bigg Boss 7 Tamil LIVE: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி...13 ஆவது போட்டியாளராக அறிமுகமான பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் கடைக்குட்டி பிக்பாஸ் சீசன் 7 தமிழில் 13 ஆவது போட்டியாளராக பிக் பாஸ் வீட்டிற்கு நுழைந்துள்ளார் சரவண விக்ரம். விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கடைக்குட்டி கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் ஆதரவைப் பெற்றவர் சரவண விக்ரம்
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Bigg Boss 7 Tamil LIVE: பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி..12 வது போட்டியாளராக அதிரடி எண்ட்ரீ கொடுத்த “மாயா கிருஷ்ணன்” பிக் பாஸ் போட்டியில் 11வது போட்டியாளராக பிரபல துணை நடிகை மாயா பங்கேற்றுள்ளார். இவர் இறைவி, விக்ரம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Bigg Boss 7 Tamil LIVE: எண்ட்ரி தந்த அமுல் பேபி விஷ்ணு.. ஆயிஷா விட்டதை பிடிப்பாரா? பிக் பாஸ் போட்டியில் 11வது போட்டியாளராக பிரபல சின்னத்திரை நடிகர் விஷ்ணு விஜய் எண்ட்ரி கொடுத்துள்ளார். ஜீ தமிழின் சத்யா சீரியலில் இவருடன் நடித்த ஆயிஷா பெரிதாக போன சீசனில் சோபிக்காத நிலையில், அவர் விட்டதை விஷ்ணு பிடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்!
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Bigg Boss 7 Tamil LIVE: பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி..10வது போட்டியாளராக பங்கேற்ற டான்ஸர் ஐஸூ..! பிக்பாஸ் வீட்டில் 10வது போட்டியாளராக நுழைந்துள்ளார் நடனக் கலைஞர் ஐஸூ. இவர் ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடனம் ஆடியுள்ளார்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Bigg Boss 7 Tamil LIVE: பிக் பாஸில் 9 ஆவது போட்டியாளராக வந்துள்ளார் வனிதா விஜயகுமாரின் மகள் பிக் பாஸ் வீட்டில் 9 ஆவது போட்டியாளராக நுழைந்துள்ளார் நடிகை வனிதா விஜய்குமாரின் மகள் ஜோவிகா விஜயகுமார். பிக் பாஸ் சீசன் 7 இன் இளம் போட்டியாளர் ஜோவிகா தான்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Bigg Boss 7 Tamil LIVE: பிக் பாஸ் வீட்டில் 8 ஆவது போட்டியாளராக நுழைந்த லவ் டுடே பட பிரபலம் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் 8 ஆவது போட்டியாளராக நுழைந்துள்ளார் நடிகை அக்ஷயா. லவ் டுடே படத்தில் கதாநாயகியாக நடித்த இவானாவின் தங்கையாக அக்ஷயா நடித்து ரசிகர்களின் கவணத்தை ஈர்த்தார்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Bigg Boss 7 Tamil LIVE: உள்ளே இருக்கும் பிரகாசம் தான் முக்கியம் - கமல்ஹாசன் பிக் பாஸ் வீட்டிற்குள் 6 ஆவது போட்டியாளராக நுழைந்த வினுஷா தன்னுடைய நிறத்திற்காக தான் சிறிய வயதில் இருந்து பல சவால்களை எதிர்கொண்டதாக தன்னைப் பற்றிய அறிமுக வீடியோவில் கூறினார். அவரைத் தொடர்ந்து பேசிய கமல்ஹாசன் மனிதர்களுக்கு உள்ளே இருக்கும் பிரகாசம் தான் முக்கியம். பூலோகத்தில் இருக்கும் பெரும்பான்மையான மனிதர்களின் நிறம் கருப்புதான் என்று கூறினார்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Bigg Boss 7 Tamil LIVE: 6 ஆவது போட்டியாளராக வந்த பாரதி கண்ணம்மா.... 6 ஆவது போட்டியாளராக பிக் பாச் வீட்டிற்குள் வந்துள்ளார் வினுஷா ரவி. பாரதி கண்ணம்மா தொடரில் கண்ணம்மாவாக நடித்து மக்களிடையே பரவலான கவணம் பெற்றார் வினுஷா ரவி
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Bigg Boss 7 Tamil LIVE: வளர்ந்து வரும் ராப் பாடகர்.... பிக் பாஸ் வீட்டில் 5 ஆவது போட்டியாளராக இளம் ராப் பாடகரான நிக்ஸன் வந்துள்ளார். சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்கள் யூ டியூபில் ராப் பாடல் வீடியோக்கள் வெளியிட்டுள்ளார் நிக்ஸன்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Bigg Boss 7 Tamil LIVE: கைமாறிக் கொண்டிருக்கும் கேப்டன் பதவி... பிக் பாஸ் வீட்டின் முதல் கேப்டனாக கூல் சுரேஷ் நியமிக்கப்பட்டு பின் பூர்ணிமாவிடன் தனது கேப்டன் பதவியை விட்டுக் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து 3 ஆவதாக பிக் பாஸ் வீட்டிற்கு நுழைந்த ரவீனாவிடம் கேப்டன் பதவியை கொடுத்தார் பூர்ணிமா. தற்போது நான்காவதாக வந்துள்ள பிரதீப் ஆண்டனியிடம் கேப்டன் பதவியை ஒப்படைத்துள்ளார் ரவீனா. ஆச்சரியப் படும் வகையில் எந்த வித வாக்குவாதமும் இல்லாமல் கேப்டம் பதவியை விட்டுக்கொடுத்து வருகிறார்கள் போட்டியாளர்கள்
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Bigg Boss 7 Tamil LIVE: 4 ஆவது போட்டியாளராக அறிமுகமான நடிகர் பிரதீப் ஆண்டனி பிக் பாஸ் சீசன் 7 இல் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹாவைத் தொடர்ந்து 4 ஆவது போட்டியாளராக வந்துள்ளார் நடிகர் பிரதீப் ஆண்டனி. அருவி, வாழ் டாடா உள்ளிட்டப் படங்களில் நடித்துள்ளார் பிரதீப் ஆண்டனி. நடிகர் கவினின் நெருங்கிய நண்பரும் கூட.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Bigg Boss 7 Tamil LIVE: பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது போட்டியாளராக அறிமுகமான ரவீனா தாஹோ பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனில் 3வது போட்டியாளராக அறிமுகமான ரவீனா தாஹோ. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான மௌன ராகம் தொடரில் நடித்து ரசிகர்களிடத்தில் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Bigg Boss 7 Tamil LIVE: பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி.. போட்டியாளர் பூர்ணிமா ரவியிடம் வம்பிழுத்துள்ளாரா கூல் சுரேஷ்? பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பங்கேற்ற கூல் சுரேஷூம், பூர்ணிமா ரவியும் பரஸ்பரம் தங்களை அறிமுகம் செய்துக் கொண்டார்கள். அப்போது நாம் இருவரும் முன்பே சந்தித்து இருக்கிறோம் என பூர்ணிமா சொல்ல, அப்படியா என ஆச்சரியத்தோடு கூல் சுரேஷ் கேட்டார். உடனே, காரில் சென்று கொண்டிருந்த என்னை வழி மறித்து பேசினீர்கள். அதன் வீடியோ கூட உள்ளது. நீங்கள் நிறைய சம்பவம் பண்ணிருக்கீங்க என பூர்ணிமா தெரிவித்தார். இதைக் கண்டு எதாவது புரளியை கிளப்பி விட்டு போயிடாதீங்க என அவர் கூறினார்.
என்னுடன் இருக்கிறவர்கள் ஹீரோயின் போறதா சொன்னார்கள். அதனால் தான் காரை வழிமறித்து பேசினேன் என கூல் சுரேஷ் பூர்ணிமா ரவியிடம் பதிலளித்தார். இதைப் பார்த்த இணையவாசிகள் ஆக மொத்தம் கூல் சுரேஷ் எல்லோரிடமும் வம்பு வளர்த்திருப்பார் போலயே என கிண்டலாக கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Bigg Boss 7 Tamil LIVE: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது போட்டியாளராக களம் கண்டார் பூர்ணிமா ரவி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனில் இரண்டாவது போட்டியாளராக களம் கண்டார் பூர்ணிமா ரவி.இவர் யூட்யூபராக, சினிமாவில் தற்போது தனது கேரியரையும் வளர்த்து வரும் இளம்பெண் ஆவார்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Bigg Boss 7 Tamil LIVE: பிக்பாஸ் நிகழ்ச்சியில் அலப்பறை எண்ட்ரீ .. ட்ரேட் மார்க் டயலாக்கை சொன்ன கூல் சுரேஷ்..! பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக எண்ட்ரீ கொடுத்த கூல் சுரேஷ் கமல் முன்பு, “ வெந்து தணிந்தது காடு.. கமல் சாருக்கு வணக்கத்தை போடு” என ட்ரேட் மார்க் டயலாக்கை பேசி காட்டினார். தொடர்ந்து, “பிக்பாஸ் சீசன் 7.. உள்ளே போறது ஏழரை” என அவர் கூறினார்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Bigg Boss 7 Tamil LIVE: இருக்கு, பெரிய சம்பவம் இருக்கு... அழுதபடி அறிமுகமான முதல் போட்டியாளர் கூல் சுரேஷ்! பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக கூல் சுரேஷ் அறிமுகமானார். சமீபத்தில் தொகுப்பாளினியிடம் மேடையில் தவறாக நடந்துகொண்டு சர்ச்சையில் சிக்கிய கூல் சுரேஷ், பிக் பாஸ் நிகழ்ச்சி மேடையில் கமல்ஹாசனிடம் கண் கலங்கியபடி பேசி அறிமுகமாகியுள்ளார்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Bigg Boss 7 Tamil LIVE: வயசானாலும் உங்க மவுசு மாறல.. பிக்பாஸ் நிகழ்ச்சியில் வரும் கமலை கொண்டாடும் ரசிகர்கள் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் தோன்றிய கமலின் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. இதில் விக்ரம் படத்தில் இடம் பெற்ற நாயகம் மீண்டும் வரார் பாடல் பின்னணியில் கமல் வருகிறார்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Bigg Boss 7 Tamil LIVE: ஒரே வாசல் இரு வீடுகள்.. பிரமிக்க வைக்கும் பிக்பாஸ் வீடு., சுற்றிக்காட்டும் கமல்..! பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் கோலாகலமாக தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் இரு வீடுகள் என ப்ரோமோஷனில் கமல் அறிவித்த நிலையில் ஒரே வாசல் இரு வீடு என்ற கான்செப்டில் அமைக்கப்பட்ட வீட்டை கமல் சுற்றிக் காட்டினார்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Bigg Boss 7 Tamil LIVE: நாயகன் மீண்டும் வரான் பாடல் பின்னணியில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் எண்ட்ரீ கொடுத்த கமல்..! பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் கோலாகலமாக தொடங்கிய நிலையில் நாயகன் மீண்டும் வரான் பாடல் பின்னணியில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் எண்ட்ரீ கொடுத்துள்ளார்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Bigg Boss 7 Tamil LIVE: தொடங்கியது பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 7 .. அடுத்தடுத்து வந்திறங்கும் போட்டியாளர்கள்..! பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் கோலாகலமாக தொடங்கியது. இந்நிகழ்ச்சியை தொடர்ந்து 7வது ஆண்டாக நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Bigg Boss 7 Tamil LIVE: பிக் பாஸூக்கே விமர்சனம்.. ரெடியாகும் வனிதா, சனம்! முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்களான சனம் ஷெட்டி, வனிதா விஜயகுமார் உள்ளிட்டோர் யூடியூபில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு விமர்சனம் செய்ய உள்ளனர். பிக் பாஸ் சண்டை சச்சரவுகளுக்கிடையே இவர்கள் விமர்சனங்கள் தொடர்பான சச்சரவுகளும் இனி களைகட்டும்
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Bigg Boss 7 Tamil LIVE: முதன்முறையாக 2 வீடு! பழைய சீசன்களைப் போல் இல்லாமல், இந்த சீசனில் 2 வீடுகள் இடம்பெற உள்ளது பற்றி ஏற்கெனவே ப்ரோமோ வெளியாகி உள்ளது. இரட்டை வேடங்களில் கமல் ப்ரொமோவில் தோன்றி ரகளையான அப்டேட் கொடுத்துள்ள நிலையில், இரண்டு வீடுகளும் எப்பட் இயங்கப் போகிறது என எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துள்ளனர்!
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Bigg Boss 7 Tamil LIVE: 18 போட்டியாளர்கள் யார்.. யார்? நேற்றே பிக் பாஸ் முதல் நாள் ஷோ ஷூட்டிங் தொடங்கிவிட்ட நிலையில், போட்டியாளர்களின் இறுதிப் பட்டியல் நேற்று முதல் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. அதன்படி விஷ்ணு விஜய், எழுத்தாளர் பவா செல்லத்துரை, பூர்ணிமா ரவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, , சரவணன் விக்ரம், ரவீணா தாஹா, வினுஷா தேவி, கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, நிக்ஷன், விஜய் வர்மா, ஜோவிகா விஜயகுமார், அக்ஷயா உதயகுமார், மாயா கிருஷ்ணன், டான்ஸர் ஐஸ்வர்யா, மணி சந்த்ரா, அனன்யா எஸ் ராவ் ஆகிய 18 பேரும் தான் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Bigg Boss 7 Tamil LIVE: பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேரம் இதுதான் ..! பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை தினமும் இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரையும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9.30 மணி முதல் இரவு 11 மணி வரை ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Bigg Boss 7 Tamil LIVE: மாலை 6 மணிக்கு கமல்ஹாசன் வரார்! இன்றைய முதல் நாள் போட்டியாளர்கள் அறிமுக நிகழ்ச்சி, மாலை 6 மணிக்கு தொடங்கி 11 மணி வரை நடைபெற உள்ளது. பழைய போட்டியாளர்களின் உற்சாக நடனம், கலை நிகழ்ச்சிகளுடன், புதிய போட்டியாளர்களை கமல்ஹாசன் அறிமுகப்படுத்த உள்ளார்.