பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகியுள்ள நிலையில் அதனைப் பற்றி காணலாம். 


 சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு என்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமில்லாத ரசிகர்கள் பொதுவாகவே உள்ளனர். எப்படி சீரியல்கள் தொடங்கி ரியாலிட்டி ஷோக்கள் வரை ஆண்டுகள் பல கடந்தும் நீங்கா இடம் பிடித்துள்ளதோ அதேபோல் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியும் உள்ளது. இதுவரை 6 சீசன்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முடிந்துள்ள நிலையில் இந்நிகழ்ச்சியின் தொகுப்பாளராக கமல்ஹாசன் உள்ளார். நடுவில் சில எபிசோட்களை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். 


இப்படியான நிலையில் இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் தொடங்குகிறது.எப்போது விடுமுறை வரும் குழந்தைகள் காத்திருப்பது போல இந்நிகழ்ச்சிக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. முதல் 3 சீசன்கள் ஜூன் முதல் செப்டம்பர் வரை நடைபெற்ற நிலையில், அடுத்த 3 சீசன்கள் அக்டோபர் முதல் ஜனவரி மாதம் வரை ஒளிபரப்பாகி வந்தது. அந்த வகையில் அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி 2024 ஆம் ஆண்டு ஜனவரி 14 அல்லது 21 ஆம் தேதி வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 






இதற்கான ப்ரோமோ வீடியோக்கள் வெளியான நிலையில், யார் யார் பங்கேற்கப் போகிறார்கள் என்பது பற்றிய வதந்தி காட்டுத்தீயாக பரவி வந்தது. இது ஒரு வகையில் முடிவுக்கு வந்து விட்டது. ஆம் இன்று பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான ஷூட்டிங் முடிந்து விட்ட நிலையில் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி  சரவணன் விக்ரம், விஷ்ணு விஜய், எழுத்தாளர் பவா செல்லத்துரை, விசித்ரா, ரவீணா தாஹா, வினுஷா தேவி, கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, நிக்‌ஷன், மணி சந்த்ரா, பூர்ணிமா ரவி, யுகேந்திரன் வாசுதேவன், அனன்யா எஸ் ராவ், விஜய் வர்மா, ஜோவிகா விஜயகுமார், அக்‌ஷயா உதயகுமார், மாயா கிருஷ்ணன், டான்ஸர் ஐஸ்வர்யா ஆகிய 18 பேரும் தான் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 


இந்த பட்டியல் இறுதியானது இல்லை என்பதால் இதில் சில எதிர்பாராத மாற்றங்கள் இருக்கும் என ரசிகர்கள், இணையவாசிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இன்று மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர் நேரலையாக ரசிகர்களை மகிழ்விக்க உள்ளது. மேலும் நாளை (அக்டோபர் 2) முதல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 7  திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணி முதல் 11 மணி வரையும்,  சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9.30 மணி முதல் 11 மணி வரை ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளதால் இதில் கமல்ஹாசன் நிச்சயம் அரசியல் பேசுவார் என்பதால் இந்த சீசன் முந்தைய சீசனைப் போல் மொக்கையாக இருக்காது என பலரும் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். 




மேலும் படிக்க: Bigg Boss 7 Tamil: தமிழ் பிக்பாஸ் வரலாற்றில் அதிகம் கொண்டாடப்பட்ட சீசன் எது ?.. டிஆர்பி சொல்லும் புள்ளி விபரம் இதோ.. !