பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பிரபல சின்னத்திரை நடிகை வினுஷா தேவி போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டுள்ளார். இது சின்னத்திரை ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


பிக்பாஸ் நிகழ்ச்சி 


பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று (அக்டோபர் 1) கோலாகலமாக  தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ள நிலௌஅக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி 2024 ஆம் ஆண்டு ஜனவரி 14 அல்லது 21 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து 7வது ஆண்டாக கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.


இதில் சரவணன் விக்ரம், விஷ்ணு விஜய், எழுத்தாளர் பவா செல்லத்துரை, விசித்ரா, ரவீணா தாஹா, வினுஷா தேவி, கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, நிக்‌ஷன், மணி சந்த்ரா, பூர்ணிமா ரவி, யுகேந்திரன் வாசுதேவன், அனன்யா எஸ் ராவ், விஜய் வர்மா, ஜோவிகா விஜயகுமார், அக்‌ஷயா உதயகுமார், மாயா கிருஷ்ணன், டான்ஸர் ஐஸ்வர்யா ஆகிய 18 பேரும் தான் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ளனர். அவர்களை ஒவ்வொருவராக கமல்ஹாசன் அழைத்து கமல்ஹாசன் அறிமுகம் செய்தார். 


“பாரதி கண்ணம்மா” வினுஷா தேவி 


இந்நிலையில் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் பிரபலமான நடிகை வினுஷா தேவி 6வது போட்டியாளராக பங்கேற்றார். அரக்கோணத்தை சேர்ந்த வினுஷா தேவி  'சுந்தரி' சீரியலின் நாயகி கேபிரியல்லவோடு இணைந்து பல மைம் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார். தடை செய்யப்பட்ட டிக்டாக் செயலியில் மிகவும் பிரபலமான வினுஷா தேவி, திமிரு படத்தில் வரும் ஸ்ரேயா ரெட்டி கேரக்டரை அப்படியே இமிடேட் செய்து வைரலானார். டஸ்கி ஸ்கின் கொண்ட வினுஷா தேவி தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். அவரைத் தேடி சீரியல் வாய்ப்பு வந்தது. 






அதுவும் விஜய் டிவியில் பிரபலமான “பாரதி கண்ணம்மா” சீரியலில் கண்ணம்மா கேரக்டரில் நடித்த ரோஷினி ஹரிப்பிரியன் விலகியதால் அவருக்கு பதிலாக வினுஷா தேவியை சீரியல் குழுவினர் தேர்வு செய்தனர். முதல் சீசன் இறுதிக்கட்டத்தில் கண்ணம்மா கேரக்டரில் இணைந்த அவர், இரண்டாம் சீசனில் ஹீரோயினாக நடித்தார். ஆனால் அந்த சீரியல் 2வது சீசனில் சரியான டிஆர்பி ரேட்டிங்கில் செல்லாததால் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. மேலும் கடந்தாண்டு N4 என்ற படத்திலும் சிறிய கேரக்டரில் நடித்துள்ளார். இப்படியான நிலையில் தான் வினுஷா பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக நுழைந்துள்ளார். இது அவருக்கு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 




மேலும் படிக்க: Bigg Boss 7 Tamil LIVE: களைகட்டும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி.. உடனுக்குடன் அப்டேட்களை தெரிந்துகொள்ள.. இங்கே கிளிக் செய்யவும்