Bigg Boss 7 Tamil: பிக்பாஸ் வீட்டுக்குள் பூர்ணிமாவை கீழ்த்தரமாக பேசியதாக விஷ்ணுவின் முகத்திரையை விஜய் கிழித்தது வைரலாகி வருகிறது. 

 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி 70வது நாளை நெருங்கி வருவதால் நாளுக்கு நாள் சர்ச்சைகள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக நிக்சனுக்கும் அர்ச்சனாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருவரும் மரியாதை இல்லாமல் பேசிக் கொண்டது வைரலானது. இந்த நிலையில் 68வது நாளான இன்று ஒளிபரப்பாக இருக்கும் எபிசோடுக்கான புரோமோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டது. அதில் போட்டியாளர்களுக்கு இடையே வைக்கப்பட்ட டாஸ்க்கில் விஷ்ணுவின் முகத்திரையை விஜய் வர்மா கிழிக்கும்படி பேசியுள்ளார்.

 

போட்டியாளர்கள் ஸ்டாருக்காக வாதாடி போட்டியிடும் டாஸ்க்கில், பிரதீப் இருக்கும்போது நடத்தப்பட்ட ஆக்சிஜன் டாஸ்க் குறித்து பேசிய விஜய் வர்மா, விஷ்ணுவை வம்பிழுத்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய 2ஆவது வாரத்திலேயே பூர்ணிமாவை பார்த்து, “இவ எல்லாம் ஒரு பெண்ணாடா.. இவளை எல்லாம் யாராவது கல்யாணம் பண்ண என்ன ஆகறது.. இவளெல்லாம் அடுத்த வீட்டுக்கு போய் என்ன செய்வாள்?” எனப் பேசியதாக விஜய் அனைவரின் முன்பும் போட்டுடைத்தார்.

அ[போது விஜய்யின் வாயை அடைக்க விஷ்ணு முயன்றபோது தொடர்ந்து பேசிய விஜய் வர்மா, “உன்னுடைய கேமிற்காக ஒரு பெண்ணை எப்படி வேண்டுமானாலும் நாரடிப்பியா” என்று கேட்டார். 

 





 

விஷ்ணு பேசியதை விஜய் வர்மா கூறியதால் பூர்ணிமா அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்றார். அதேநேரம் விஜய் வர்மாவுக்கு ஆதரவாகவும் விஷ்ணுவுக்கு எதிராகவும் விசித்ரா பேச ஆரம்பித்தார். 

 

கடந்த சில வாரங்களாக பூர்ணிமா - விஷ்ணு இடையே லவ் டிராக் ஓடுவதாக இணையத்தில் பிக்பாஸ் வீடியோக்கள் வைரலானது. இந்த சூழலில் பூர்ணிமா குறித்து அநாகரிகமாக விஷ்ணு பேசியதை விஜய் வர்மா போட்டு உடைத்துள்ளது பிக்பாஸ் வீட்டில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

 

முன்னதாக கோபப்பட்டு ஆக்ரோஷமாக விளையாடி, போட்டியாளர்களுக்கு மிரட்டல் விடுத்ததால் கமல்ஹாசனால் எச்சரிக்கப்பட்ட விஜய் வர்மா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இரண்டு வார்த்திற்கு முன்பு வைல்டு கார்டு எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த விஜய் வர்மா, பக்காவாக விளையாடி விஷ்ணுவின் மற்றொரு பக்கத்தை வெளிக்கொண்டு வந்துள்ளார்.