விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஞாயிற்று கிழமை தொடங்கியது. போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வரவழைக்கப்பட்டு, அவர்களை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பும் வழக்கமான நடைமுறையை நிறைவேற்றினார் கமல். தனி அறிமுக வீடியோ, போட்டியாளர்களின் பங்கேற்பு லட்சியம் என அனைத்தும் முடிந்து ஒரு வழியாக போட்டி தொடங்கிவிட்டது. வழக்கமாக போட்டி தொடங்கினால், முதல் வாரம் கொஞ்சம் ரிலாக்ஸேசன் இருக்கும். ஆனால், இந்த முறை போட்டி தொடங்கியதுமே கடுமையான விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கிய நாள் முதல் ஆயிஷாவை, மத்த போட்டியாளர்கள் ரவுண்டு கட்டினர். துன்பத்துக்கு ஆளான ஆயிஷா மனம் வருந்தி அழ தொடங்கியதை அனைவரும் பார்த்திருப்போம். அவரை அனைவரும் ஜோக்கர் என நினைத்து வருகின்றனர் என்பதையும், ஆயிஷா தெரிந்து கொண்டார். இப்படி ஆயிஷாவை குறை சொல்லிய மற்றவர்களின் வாய் பிளக்கும் அளவுக்கு, ஆயிஷா ஒரு ட்ரிக்கினை செய்து காட்டினார். அந்தவகையில், ஆயிஷா இயற்பியல் விதியை அடிப்படையாக கொண்ட “லைட் ஆஸ் ஃபெதர்” என்ற ட்ரிக்கை போட்டியாளர்களுக்கு கற்று கொடுத்தார்.
முதலில், ஷெரின் ஷாம்-ஐ வைத்து விளையாடிவர்கள், பின் சாந்தியை வைத்து விளையாடினர். இதில், ஒரு போட்டியாளரை முதலில் அனைவரும் சேர்ந்து தூக்க முயற்சிக்கின்றனர். அது கடினமாக இருக்கிறது. பின்னர் சாந்தியின் தலைக்கு மேல் ஆயிஷா, அமுதவாணன், ராபர்ட் மாஸ்டர், மணிகண்டன் ஆகியோர் சிறிது நேரம் அவர்களின் கைகளை வைத்து, பின் அனைவரும் தூக்க முயற்சித்த போது அசால்டாக எடுத்த காரியத்தை செய்து காட்டினர்.
இதைசெய்து முடித்தவுடன் மத்த பிக்பாஸ் போட்டியாளர்கள், ”ஹே சூப்பர் ஆயிஷா”என்று சொன்னர். இந்த ட்ரிக் பார்ப்பதற்கு வித்தியாசமாக உள்ளதனால், மக்கள் சிலர் இதை ஒருமுறை ட்ரை செய்து பார்க்க வேண்டும் என ஆசைப்படுவதாக கமெண்ட் செய்துள்ளனர். பிக்பாஸ் ஹவுஸ்மேட்டுகள் அனைவரும் டாஸ்க்குகளை செய்து சோர்ந்து போய் இருக்கும் நிலையில், அவர்களை சற்று ரிலாக்ஸ் செய்துகொள்ள இதுபோன்று கொஞ்சம் நேரம் விளையாடுவதை வழக்கமாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : Nayanthara Baby Issue: வாடகைத் தாய் விவகாரம் : நயன்தாரா - விக்னேஷ்சிவன் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்