Nayanthara Baby Issue: வாடகை தாய் விவகாரத்தில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வாடகை தாய் விவகாரத்தில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவிக்கப்பட்டது. அரசு விதிமுறைகளை மீறி நயன்தாரா-வின்னேஷ் தம்பதியினர் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. நயன்தாரா, விக்னேஷ் சிவன், அவர்களுக்கு சிகிச்சை பார்த்த மருத்துவர்கள், வாடகை தாய் ஆகியோரை விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதி:









நயன்தாரா குழந்தை பெற்றுக்கொள்ள போகிறார். அதனால் வேறு எந்த படங்களிலும் கமிட் ஆகவில்லை போன்ற தகவல்கள் வெளியாகின. அந்த சமயத்தில் திடீரென கடந்த 9-ஆம் தேதி விக்னேஷ் சிவன் தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன என்ற அதிகாரபூர்வமான தகவலை சோஷியல் மீடியா மூலம் அறிவித்து அதிர்ச்சி அளித்தார். 




காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்


வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டது குறித்து ஏராளமான சர்ச்சைகள் எழுந்தன. மேலும் இது தொடர்பாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில் அரசு விதிமுறைகளை மீறி நயன்தாரா-வின்னேஷ் தம்பதியினர் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுள்ளனர். நயன்தாரா, விக்னேஷ் சிவன், அவர்களுக்கு சிகிச்சை பார்த்த மருத்துவர்கள், வாடகை தாய் ஆகியோரை விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று கூறியதாவது,  திருமணம் முடிந்து 5 ஆண்டுகளுக்கு பிறகே வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும். திருமணமாகி சில மாதங்களே ஆன நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியிடம் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு விளக்கம் கேட்கப்படும் என்று தெரிவித்து இருந்தார்.  மேலும் இந்த விவகாரம் தொடர்பாக சுகாதார இணை இயக்குனரின் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனிடம் விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தார். குழந்தை பிறந்த மருத்துவமனையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.  உரிய விசாரணைக்கு பிறகு வாடகை தாய் விவகாரம் குறித்த முழு விவரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.