GP Muthu vs Danalakshmi : ‛விட்ட குறை.. தொட்ட குறையா..?’ ஜி.பி.முத்து - தனலட்சுமி மோதல் பின்னணி..!

Bigg Boss 6 Tamil GP Muthu : அமுதவானன் மற்றும் ரச்சித்தாவுடன் ஏற்ப்பட்ட உரையாடலில், தனலட்சுமியை பற்றி சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

Continues below advertisement

பிக்பாஸ் ஆரம்பத்த நாள் முதல் தனலட்சுமி எனும் டிக்டாக் பிரபலம் தன் முகத்தை உர்ரென வைத்துக்கொண்டு அனைவருடன் சண்டையிட்டு வாக்குவாதலில் ஈடுபட்டு வருகிறார்.

Continues below advertisement

ஜி.பி முத்துவை பார்தாலே காண்டாக இருக்கிறது.. ஜி.பி முத்து ஒரு நாரதர், ஜி.பி நடிக்கிறார் என அடுக்கடுக்காக நெல்லைகாரர் மீது குற்றம் சாட்டி வருகிறார் தனலட்சுமி. அதுமட்டுமில்லாமல், மகேஸ்வரியுடன் சாம்பாருக்கு சண்டை போட்டு, லூசு மாரி பேசாதீங்க என வார்த்தைவிட்டுள்ளார் தனலட்சுமி.

ஜி.பி. முத்துவிற்கு பல பேர் ஆதரித்து வரும் நிலையில், அவருக்கு ஆர்மியும் ஆரம்பித்துவிட்டனர் பிக் பாஸ் ரசிகர்கள். பிக் பாஸ் வீட்டில் நடக்கும் பல வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகிவருகின்றது. அப்படியாக, ஒரு புது வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், தனலட்சுமியை பற்றி ஜி.பி முத்து, அமுதவாணன் மற்றும் 
ரச்சித்தா ஆகியோர் கலந்து உரையாடும் வீடியோ, இணையத்தில் லீக் ஆகியுள்ளது.

 “ அந்த பொண்ணு நல்ல பொண்ணுதான். அந்த பொண்ண எனக்கு எப்படி தெரியும்நா...அது டிக்டாக் பண்ணும். அது பேரு என்ன விஜயலட்சுமியா சாந்திலட்சிமியா..ஆ தனலட்சுமி. எனக்கு அப்போவே தெரியும். டிக்டாக்-ல பாத்து இருக்கேன். டூயட்லாம் பண்ணிருக்கேன். அதனால உரிமையா வா போ என பேசிக்கொள்வோம். எனக்கு பல லேடீஸ் ஃபேன்ஸ் இருக்காங்க. ஆனால் எப்போதும் நான் மெசேஜ் அனுப்ப மாட்டேன்.” என பெருந்தன்மையாக தனலட்சுமியை பற்றி பேசியுள்ளார்.

இவர் இப்படி சொன்னாலும், முன்னதாகவே இருவருக்கும் ஏதோ பிரச்சனை இருந்துள்ளதாக தெரிகிறது. அதனால்தான் இவர்கள், பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடித்துக்கொள்ளாத வகையில் சண்டை போட்டுக்கொண்டு வருகின்றனர். நிகழ்ச்சி துவங்கிய சில நாட்களிலே நிலைமை மோசமாக மாறியுள்ளது. போக போக என்ன கூத்து நடக்குமோ என்று பிக்பாஸ் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். 

மேலும் படிக்க : Bigg Boss 6 Tamil GP Muthu: வேட்டி கட்டியதால் கிடைத்த மதிப்பு..பிக்பாஸ் நிகழ்ச்சியில் நெகிழ்ந்த ஜிபி முத்து

 

Continues below advertisement