இந்த ப்ரோமோவிலும், வழக்கம் போல் நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற டாஸ்கினை விளையாடி கொண்டிருக்கின்றனர். அதில் , அரசல் புரசலாக விளையாட்டில் கவனமாக இருக்கும் போட்டியாளர்கள் ஒரு கட்டத்தில் அவர்களின் கவனத்தை இழந்து விளையாடுகின்றனர். அதன் பிறகு, இது மைண்ட் கேம்.. மைண்ட் கேம் என கூட்டம் கூடி பேச துவங்கி விடுகின்றனர்.






முதல் ப்ரோமோவில், எல்லோரும் பொம்மைகளை வைக்க ஓடும்போது, அனைவரும் தள்ளிக்கொண்டு அப்படி இப்படியென டால் ஹவுஸ் நோக்கி செல்ல முயற்சி செய்கிறார்கள். அப்போது போட்டியாளர்கள் கீழே விழுந்து விடுகிறார்கள். கோவப்பட்ட அசீம், தனலட்சுமியுடன் வாய் தகராறில் ஈடுபட்டார்.


அதன் எதிரொலியாக இரண்டாவது ப்ரோமோவில் பேசிய தனலட்சுமி,  ”நான் தள்ளிவிட்ட பிறகுதான் அவர்களின் மண்டை உடைந்தது என்று ஃபுட்டேஜ் போட்டு காட்டினால், நான் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியே போறேன். எல்லோரிடமும் மன்னிப்பு கேட்கிறேன், காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறேன். இல்லையென்றால், என்னை குற்றம் சாட்டியவர்கள் எல்லோரும் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.” என தன் தரப்பு நியாயத்தை விவரித்தார்.  கடந்த சில நாட்களாக, தனலட்சுமி, அஸீம், ஷிவின் ஆகியோர் அவர்களின் செயல்கள் மூலம் பேசுபொருளாகிவிட்டனர்.




போட்டியில் பங்குபெற்ற ஜி.பி முத்து தானாகவே போட்டியில் இருந்து விலகினார். அதுபோக, நடிகை சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். இவர்கள் இருவர் போக, பாடகர் அசல் கோலார், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன் , சீரியல் நடிகர் முகம்மது அஸீம், சீரியல் நடிகை ஆயிஷா, ஷெரின் ஷாம், மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்‌ஷிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , விஜே மகேஸ்வரி, அமுதவாணன், நடனக் கலைஞர் மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, சிங்கப்பூர் மாடல் நிவாசினி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன்,மைனா நந்தினி ஆகிய 19 நபர்கள் உள்ளனர்.


மேலும் படிக்க : Rajinikanth on Kantara: ‘ஹாட்ஸ் ஆஃப் ரிஷப் ஷெட்டி.. இது மாஸ்டர் பீஸ்..’ காந்தாரா படத்தை புகழ்ந்து தள்ளிய ரஜினிகாந்த்!