நான் எல்லோரையும் தள்ளிவிட்ட படக்காட்சியை கமல் சார் போட்டுக்காட்டினால், நான் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியே போறேன். எல்லோரிடமும் மன்னிப்பு கேட்கிறேன், காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறேன். இல்லையென்றால், என்னை குற்றம் சாட்டியவர்கள் எல்லோரும் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.


நேற்று முதல், நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற டாஸ்க் நடந்து வருகிறது. இதில் ஏற்கனவே பல அமுளி துமுளி ஏற்ப்பட்ட நிலையில், இன்று வெளியான ப்ரோமோ இரண்டிலும், அதே ரணகளம் தொடர்கிறது.


முதல் ப்ரோமோவில், எல்லோரும் பொம்மைகளை வைக்க ஓடும்போது, அனைவரும் தள்ளிக்கொண்டு அப்படி இப்படியென டால் ஹவுஸ் நோக்கி செல்ல முயற்சி செய்கிறார்கள். அப்போது போட்டியாளர்கள் கீழே விழுந்து விடுகிறார்கள். கோவப்பட்ட அசீம், தனலட்சுமியை பார்த்து, “நீயும் ஒரு பொண்ணு தானே. அறிவு என்பது கொஞ்சம் கூட இல்லை. நிவாஸையும் ஷெரினையும் அப்படி புடிச்சு தள்ளி விடுகிறாய்.”
என்று கோவமாக கேள்வி கேட்டார்.






இரண்டாவது ப்ரோமோவில், தனலட்சுமி, ரச்சித்தா மற்றும் ஷிவின் ஆகியோர் ஒன்று சேர்ந்து, நடந்த பிரச்சனைக்கு பஞ்சாயத்து செய்கின்றனர். அதில்,   “அசீம் வரும்போதே எல்லாத்தையும் தள்ளுடா என்று தள்ளிவிட்டார். எல்லோரும் முன் நீயும் பொண்ணுதான என்று கேள்வி கேட்கும் போது, நான் அமைதியாக இருந்தேன். அந்த இடத்தில் ஏதாவது கேட்க எவ்வளவு நேரம் ஆகும். என் மீது தப்பு இல்லை. நான் எதுவும் கேட்கவில்லை. நான் தள்ளிவிட்ட பிறகுதான் அவர்களின் மண்டை உடைந்தது என்று ஃபுட்டேஜ் போட்டு காட்டினால், நான் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியே போறேன். எல்லோரிடமும் மன்னிப்பு கேட்கிறேன், காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறேன். இல்லையென்றால், என்னை குற்றம் சாட்டியவர்கள் எல்லோரும் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.” என தன் தரப்பு நியாயத்தை தனலட்சுமி விவரிக்கிறார்.




போட்டியில் பங்குபெற்ற ஜி.பி முத்து தானாகவே போட்டியில் இருந்து விலகினார். அதுபோக, நடிகை சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். இவர்கள் இருவர் போக, பாடகர் அசல் கோலார், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன் , சீரியல் நடிகர் முகம்மது அஸீம், சீரியல் நடிகை ஆயிஷா, ஷெரின் ஷாம், மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்‌ஷிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , விஜே மகேஸ்வரி, அமுதவாணன், நடனக் கலைஞர் மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, சிங்கப்பூர் மாடல் நிவாசினி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன்,மைனா நந்தினி ஆகிய 19 நபர்கள் உள்ளனர்.