பொதுவாகவே அமைதியாக இருக்கும் ஏடிகே, தனலட்சுமி ரொம்ப மோசம், அதுக்கெல்லாம் கன்னத்திலே அடிப்பவன் தான் சரி பட்டு வருவான் என்று பேசியுள்ளார்.
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் போட்டியாளர்களுள் அமைதியாக இருப்பவர் ஏடிகே. ஏதாவது டாஸ்க் கொடுக்கப்பட்டால் அதை ஒழுங்காக செய்து முடிக்கும் சமத்து பிள்ளையாக அவரை பார்த்திருப்போம். ராப் பாடிக்கொண்டு சக போட்டியாளர்களை மகிழ்விக்கும் ஒரு நல்ல போட்டியாளராக, வரும் இவரின் மறுபக்கத்தின் திரை, மெல்ல மெல்ல கிழிந்து வருகிறது.
புறம் பேசுவது மனித இயல்புகளுள் ஒன்று. பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளில் சண்டை காட்சிகள் முக்கால் மணிநேரம் ஒளிபரப்பப்பட்டால், அதற்கு சமமாக புறம் பேசும் காட்சிகளும் ஒளிபரப்பபடும்.
அந்தவகையில், ஏடிகே ராபர்ட் மாஸ்டரிடம் உட்கார்ந்து உரையாடி கொண்டிருந்தார். அப்போது, தனலட்சுமி பற்றி பேச துவங்கிய ஏடிகே, “தனலட்சுமி இருக்குல, இருப்பதிலே அதுதான் ரொம்ப ரொம்ப மோசம். யாரையும் மதிக்க மாட்டுது. எவனாவது முடியை பிடித்து செவில் மீது அடிப்பான். அப்போதுதான் அது திருந்தும்.” என பேசியுள்ளார்.
இந்த வீடியோ, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பபடவில்லை. ஆனால், டிஸ்னி ஹாட்ஸ்டாரில் உள்ள நேரலையில் ஒளிபரப்பபட்டது. இப்போது இந்த வீடியோவை டிவிட்டரில் ஷேர் செய்து, மக்கள் ஏடிகே மீது கண்டனம் தெரிவித்துள்ளனர். பெண்கள் மீதான வன்முறை கண்டிக்கதக்கது என்று அவர்கள் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளனர். இன்று, வெளியான இரண்டாவது ப்ரோமோவிலும், இதுபோல் ராமும் மற்றவர்களை பற்றி பேசிக்கொண்டு இருந்தார்.
பிக் பாஸ் போட்டியாளர் :
இந்நிகழ்ச்சியின் முதல் வாரத்தில், ஜிபி முத்து அவராகவே வெளியேறினார். பின் அதே வாரத்தில் எலிமினேட் செய்யப்பட்ட சாந்தியை அடுத்து, இரண்டாம் வாரத்தில் அசல் கோலார் எலிமினேட் செய்யப்பட்டார். இவர்கள் சென்ற பின், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன்,அரவிந்த், சீரியல் நடிகர் முகமது அசிம், சீரியல் நடிகை ஆயிஷா, ஷெரின் ஷாம், மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்ஷிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , விஜே மகேஸ்வரி, அமுதவாணன், நடனக் கலைஞர் மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, சிங்கப்பூர் மாடல் நிவாசினி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன் மற்றும் மைனா நந்தினி என மொத்தம் 18 போட்டியாளர்கள் உள்ளனர்.
மேலும் படிக்க : 50 days of VTK: 50வது நாள்... 'வெந்து தணிந்தது காடு' போஸ்டரை பகிர்ந்து தயாரிப்பு நிறுவனம்!