Bigg Boss 6 Tamil : டான்ஸ் ஆடிக்கொண்டிருந்த தனலட்சுமி... தூங்கி வழிந்த அசீம்.. வெறுப்பை கக்கும் நெட்டிசன்ஸ்!

Bigg Boss 6 Tamil : தனலட்சுமி நடனமாடிய போது, அனைவரும் கலகலப்பாக இருக்க, அசீம் மட்டும் உறங்கிய படி அமைதியாக இருந்தார்.

Continues below advertisement

பிக்பாஸ் வீடு இந்த வாரம் முழுவதுமாக, டி.வி சேனலாக மாறி புது புது டாஸ்குகளை செய்ய போகிறது என்பது நேற்றைய ப்ரோமோவில் தெரிய வந்தது. அந்த வகையில், ராசி பலன்கள் நிகழ்ச்சி, சமையல் நிகழ்ச்சி, பட்டிமன்ற நிகழ்ச்சி என பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

Continues below advertisement

முன்னதாக விவாத நிகழ்ச்சியில் அசீமிற்கும் தனலட்சுமிக்கும் சண்டை மூண்டது.அசீமும், தனலட்சுமியும் மாற்றி மாற்றி வாக்குவாதம் செய்தனர். கடுப்பான தனம், ஒரு கட்டத்தில் அழுக துவங்கி வெளியே சென்று கத்தி கதற துவங்கினார். “ எல்லா வாரமும் என்னயே ஏதாவது செய்துகொண்டு இருந்தால் நான் என்னதான் செய்வேன்” என்று புலம்பினார்.

இப்போது, வேடம் போட்டுக்கொண்டு ஃபேஷன் ஷோ மற்றும் பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். கடுப்பாகி அழுத தனலட்சுமிக்கு அழகாக மேக்-அப் போட்டு விட்டு, நீங்கள்தான் எங்கள் ஷோவின் குஷ்பு என்று சொல்லி அவரை நடனமாடவைத்தனர். அப்போது அனைவரும் கலகலப்பாக இருக்க, அசீம் மட்டும் முகத்தை தொங்க போட்டுக்கொண்டு அமைதியாக இருந்தார். அவர் உறங்குகீறாரா அல்லது தனலட்சுமியின் முகத்தை பார்க்க முடியாமல் தலை குணிந்து உள்ளாரா என்பது தெரியவில்லை. ஆனால், நெட்டிசன்கள் அசீம் மீது வெறுப்பை கக்கி வருகின்றனர் என்பது தெரிகிறது.

மற்றொரு பக்கம், இன்று வெளியான மூன்றாவது ப்ரோமோவில், விக்ரமனுக்கும் மணிகண்டனுக்கும் பேச்சுவார்த்தை ஏற்பட்டது போன்ற காட்சிகள் இடம்பெற்று இருக்கிறது.

பிக் பாஸ் போட்டியாளர் :

இந்நிகழ்ச்சியின் முதல் வாரத்தில், ஜிபி முத்து அவராகவே வெளியேறினார். பின் அதே வாரத்தில் எலிமினேட் செய்யப்பட்ட சாந்தியை அடுத்து, இரண்டாம் வாரத்தில் அசல் கோலார் எலிமினேட் செய்யப்பட்டார்.  இவர்கள் சென்ற பின், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன்,அரவிந்த், சீரியல் நடிகர் முகம்மது அசீம், சீரியல் நடிகை ஆயிஷா, ஷெரின் ஷாம், மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்‌ஷிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , விஜே மகேஸ்வரி, அமுதவாணன், நடனக் கலைஞர் மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, சிங்கப்பூர் மாடல் நிவாசினி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன் மற்றும் மைனா நந்தினி என மொத்தம் 18 போட்டியாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

 

Continues below advertisement