விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்புதான் இந்த பிக்பாஸ் சீசன் 5 நிறைவு பெற்றது. இந்த தொடரில் ராஜூ ஜெயமோகன் வெற்றி பெற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிக்பாஸ் வீட்டின் குரலாக ஒலிபரப்பாகும் குரல் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலம். இந்த நிலையில். இந்த குரல் பற்றி புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு குரல் கொடுத்து வருபவர் சாஷோ என்பவர் ஆவார். இவர் பிக்பாஸ் தவிர வேறு எந்த நிகழ்ச்சிகளுக்கும், எந்த தொடருக்கும் இதுவரை குரல் கொடுத்ததில்லை. இவருடைய மாத சம்பளம் ரூபாய் 5 லட்சம் ஆகும். இதுவரை ஒளிபரப்பாகியுள்ள 5 சீசன்களுக்கும் சாஷோதான் குரலாக ஒலித்து வருகிறார். நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்களை காட்டிலும் பிக்பாஸ் குரலின் சம்பளம் அதிகளவில் இருப்பதை கண்டு ரசிகர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.
ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே விஜய் தொலைக்காட்சி மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் தற்போது தனது அடுத்தகட்டத்தை தொடங்கியுள்ளது. பிக்பாஸ் அல்டிமேட் என்ற 24 மணிநேரமும் நேரடி ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சியையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். இந்த பிக்பாஸ் அல்டிமேட் தொடருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு குரல் கொடுத்த சாஷோதான் பிக்பாஸ் வீட்டின் குரலாக ஒலிக்க உள்ளார்.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்காக சாஷோவிற்கு கூடுதல் சம்பளம் அளிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வனிதா, சினேகன், சுரேஷ் சக்கரவர்த்தி, ஜூலி, அபிராமி ஆகியோர் களமிறங்கியிருப்பதால் பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் அனைவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏற்கனவே ஒளிபரப்பான 1 முதல் 5 சீசன்களில் பங்கேற்றவர்கள் என்பதால் இது ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்கும் சில போட்டியாளர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் பிக்பாஸ் அல்டிமேட் ப்ரோமோவாக வெளியிடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : குக் வித் கோமாளிக்கு ‘நோ’ சொன்ன புகழ் மீண்டும் விஜய் டிவியில்? - என்ன நிகழ்ச்சி தெரியுமா?
மேலும் படிக்க : Bigg Boss Ultimate: வெளியானது பிக்பாஸ் அல்டிமேட் போட்டியாளர்கள் லிஸ்ட்.. போடு ! பத்த வைக்க வத்திக்குச்சி ரெடியா இருக்கு !
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்