’என்ன சொல்ல போகிறாய்’ படத்தை அடுத்து ‘வலிமை’ பட ரிலீஸுக்காக காத்திருக்கிறார் பிரபல காமெடி நடிகர் புகழ். குக் வித் கோமாளி சீசன் 2-ன் முக்கிய போட்டியாளரான அவர், சீசன் 3-ல் பங்கேற்கவில்லை. இந்நிலையில், கோலிவுட்டில் பிஸியாக இருக்கும் அவரை மீண்டும் சின்னத்திரை பக்கம் அழைக்க பிக் பாஸ் அல்டிமேட் குழு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 


பிக்பாஸ் தமிழ் 5 நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்த நிலையில், தயாரிப்பாளர்களின் புது முயற்சியாக பிக்பாஸுக்கென்ற பிரத்யேக நிகழ்ச்சியை OTT தளத்தில் வெளியிட முடிவு செய்துள்ளனர். 13 போட்டியாளர்களுடன் 42 நாட்களுக்கு தொகுத்து வழங்கும் வகையில், இந்த நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டு வருகிறது. 


இந்த புதிய நிகழ்ச்சியில் பிக்பாஸில் டைட்டில் வெற்றியாளர்களைத் தவிர மற்ற பிக்பாஸ் சீசன் போட்டியாளர்களும் பங்கேற்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. பிக் பாஸ் அல்டிமேட் 24*7 பிக் பாஸ் தமிழ் OTT என்னும் பெயரில் இதற்கான லோகோவை சிவகார்த்திகேயன் சீசன் 5-ன் இறுதிபோட்டியன்று வெளியிட்டார்.






ஏற்கனவே, இந்த பிக் பாஸ் அல்டிமேட் வீட்டின் முதல் போட்டியாளராக பிக்பாஸ் தமிழ் 1 சீசனில் பங்கேற்று இரண்டாம் இடத்தை பிடித்த பாடலாசிரியர் சினேகன் வர இருப்பதாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டது. அதேபோல், அதே சீசனில் பங்குபெற்ற ஜூலியும் இரண்டாவது போட்டியாளராக அறிமுகப்படுத்தப்பட்டார். அடுத்ததாக, வணிதா வருவதாக அறிவிப்பு வெளியானது. நான்காவது போட்டியாளராக சுரேஷ் சக்கரவர்த்தியும், ஐந்தாவதாக அபிராமியும் இணைந்துள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை தவிர, வெளி ஆளாய் புகழை பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பும் திட்டம் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், புகழ் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றால் நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இருக்கும் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண