BiggBoss Ultimateஇல் முதலில் கமல்ஹாசன் வனிதாவை அறிமுகப்படுத்தி பேசினார். கண்டெய்னர்ல வந்திருக்கேன். இங்கதான் இருப்பேன் என்றார் வனிதா.
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது முதல் OTT பிரத்தியேகமான பிக்பாஸ் தமிழ் சீசனை(இன்று) ஜனவரி 30 முதல் 24x7 ஸ்ட்ரீமிங் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், 2022 ஆம் ஆண்டின் முதல், மிகப்பெரிய OTT அறிமுகத்துடன், கமல்ஹாசன் BiggBossUltimate-ஐயும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து தொகுத்து வழங்கி வருகிறார்.
மினுமினுக்கும் வீடு.. அதிரடி மாற்றங்களுடன் கோலாகலமாக தொடங்கியது BiggBoss Ultimate.. முதலில் கமல்ஹாசன் வனிதாவை அறிமுகப்படுத்தி பேசினார். ஏதோ ஒரு காரணத்துக்காகத்தான் வந்திருக்கேன் என்று வனிதா சொன்னார். யாருக்கும் உங்களை அசைக்கமுடியாது என வனிதா விஷயகுமாரிடம் சொன்ன கமல்ஹாசன். அறிமுகத்தின்போது, நீங்கள் வாழ்க்கையில் எடுக்கும் நிலையில் அசைக்கமுடியாமல் இருக்கிறீர்கள் என கமல் பாராட்டிப் பேசினார். "நான் அடிச்சா தாங்கமாட்ட” என்று முதல் ஆளாக அல்டிமேட்டை வனிதா விஜயகுமார் அதிரவிட்டார்.
அதிரடியாக களமிறங்கிய வனிதாவுக்கு கமல்ஹாசன் அட்வைஸ் கொடுத்தார். ஒரே ஒரு அட்வைஸ்தான் உங்களுக்கு. ரொம்ப நாள் இங்கேயே இருக்கணும் என அட்வைஸ் பண்ணார், Stay Longer என்றார். மத்தவங்க மாதிரி இல்ல. கண்டெய்னர்ல வந்திருக்கேன். இங்கதான் இருப்பேன் என்றார் வனிதா. அடுத்த போட்டியாளார் யார் என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் இருக்கின்றனர்.
BiggBossUltimate க்குள் செல்லும் பிரபலங்கள் வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதில், பாடலாசிரியர் சினேகன் மற்றும் நடிகை வனிதாவிற்கு நாள் ஒன்றுக்கு 45 ஆயிரம் முதல் 50 ஆயிரம் சம்பளம் எனவும், காமெடி நடிகர் தாடி பாலாஜிக்கு நாளொன்றுக்கு 30 ஆயிரம் முதல் 45 ஆயிரம் வரை என்றும் கூறப்படுகிறது.
அதேபோல், ஜல்லிக்கட்டு போராட்ட புகழ் ஜூலிக்கு 30 ஆயிரம் சம்பளம் எனவும், மீதமுள்ள போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது வழங்கிய அதே சம்பளம் வழங்க இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்