பிக்பாஸ் சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் விசித்ராவுக்கும் ஜோவிகாவிற்கும் இடையே ஏற்பட்ட கல்வி தொடர்பான விவாதத்தை அடுத்து தான் இந்த ஆட்டம் சூடு பிடிக்க தொடங்கியது. இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் இல்லை என்பது போல் பேசிக்கொண்டாலும், விசித்ராவின் கருத்துக்கே மக்கள் ஆதரவு கிடைத்தது. 


இதனையடுத்து பெண்கள் பாதுகாப்பு பிரச்னையைக் காரணம் காட்டி போட்டியாளர்களில் ஒருவரான பிரதீப்மீது ஹவுஸ்மேட்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இந்த பிரச்னை ஹோஸ்ட் கமல்ஹாசனிடன் சென்ற போது, போட்டியாளர்கள் முன் ரெட் கார்டுகள் வைக்கப்பட்டிருந்தது. அதில் ரவீனா, மாயா, பூர்ணிமா, நிக்சன் உள்ளிட்ட சக போட்டியாளர்கள் ப்ரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுத்தனர். 


இந்நிலையில் விசித்ரா, தினேஷ், அர்ச்சனா, கூல் சுரேஷ் ஆகிய போட்டியாளர்கள் மட்டும் பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுக்கவில்லை. குறிப்பாக விசித்ரா, பிரதீப்பின் இண்டென்ஷன் தவறானதில்லை, பேசுவது மட்டும் தான் அப்படி பேசுகிறார், அவருக்கு வார்னிங் மட்டும் கொடுக்கலாம் எனக் கூறி இருந்தார். இதனால் கூடுதலாக பிரதீப் ரசிகர்களின் சப்போர்ட்டும் விசித்ராவுக்கு கிடைத்தது.


இப்படி ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற விசித்ரா சமீப நாட்களாக வெறுப்பை சம்பாதித்து வருகிறார்.  இந்நிலையில் தற்போது குக்கிங் டீமில் உள்ள விசித்ரா, தினேஷ் குறித்து ரட்சித்தாவிடம் சொல்வது போன்று பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


அதில் அவர் பேசியுள்ளதாவது: ”இவனோட வந்து எப்படி கூட குடித்தனம் பண்ணுவாங்க. திரும்பி வந்துராதம்மா தாயே, ஒழுங்கா வாழ்க்கைய நடத்து. தனியே இருந்துடலாம் இவங்களோடலாம் குடித்தனம் பன்றதுக்கு. இமோஷனல் பாண்டிங்கா? ஒரு மண்ணாங்கட்டியும் ஆகாது உன்கிட்ட இருந்தா.. ஏழேழு ஜென்மத்துக்கும் வெறுப்ப தான் சம்பாதிச்சி வைப்ப. அன்ப குடுத்து இவரு ஏமாந்துட்டாராம்? உடம்பு முழுக்க வெஷம், வன்மம், பொறாமை” இவ்வாறு விசித்ரா பேசி உள்ளார். 


 






மேலும் படிக்க


Kamal On Vijayakanth : விஜயகாந்தின் கோபத்திற்கு ரசிகன் நான் - மனபாரத்துடன் நேரில் அஞ்சலி செலுத்திய கமல்...


CISF Chief: இந்திய வரலாற்றிலேயே முதல்முறை...சிஐஎஸ்எஃப்-க்குப் பெண் தலைவர் நியமனம்- ITBP-க்கு புதிய தலைவர்!