Big Boss 7 Tamil: பிக்பாஸ் வீட்டில் திடீரென வந்த நீதிமன்றத்தில், ஏட்டிக்கு போட்டியாய் சண்டையிடும் விசித்ரா மற்றும் பூர்ணிமாவின் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. 

 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 கந்த அக்டோபர் மாதத்தில் இருந்து ஒளிபரப்பாகி வருகிறது. பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்டதை வைத்து இந்த வாரத்தில் பிக்பாஸ் வீடு களேபரமானது. விசித்ரா, அர்ச்சனா ஒரு கூட்டணியாகவும், பூர்ணிமா, மாயா, ஜோவிகா, ஐஷூ உள்ளிட்டோர் மற்றொரு கூட்டணியாக இணைந்து அடித்து கொள்ளாத குறையாக சண்டையில் ஈடுபட்டனர். 

 

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் திடீரென தீர்ப்பு வழங்கும் நீதிமன்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதில், விசித்ரா அர்ச்சனாவுக்கு ஆதராக ஆஜராகி மாயா, பூர்ணிமா டீம் மீது குற்றம்சாட்டுகிறார். அதேநேரம், சாட்சி கூண்டில் ஏறிய பூர்ணிமா அர்ச்சனா மற்றும் விசித்ராவுக்கு எதிராக குற்றம்சாட்டினார். இப்படியே இருவரும் ஒருவருக்கு ஒருவர் மாறி, மாறி குறைகளை கூறி கொண்டனர். 

 


 

இதற்கிடையே வெளியான மூன்றாவது புரோமோவில், பிக்பாஸ் வீட்டில் பொருட்களின் பில் வைத்து போட்டியாளர்களுக்கு டாஸ்க் வைக்கப்பட்டது. அதில் பில் எடுத்து பூர்ணிமா மறைத்து வைத்ததாக கூல்சுரேஷ் மற்றும் தினேஷ் உள்ளிட்டோர் சண்டையிடுகின்றனர். இதனால் டாஸ்கில் போட்டியாளர்களிடையே சிறப்பான சம்பவங்கள் இருக்கும் என ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். 

 

பிரதீப் வெளியேறியதற்கு ரெட் கார்டு கொடுத்த மாயா, பூர்ணிமா, ஐஷூ மற்றும் கோவிகாவுக்கு எதிராக விசித்ரா போர்க்கொடி தூக்க, மாயவின் கேப்டன்ஷிப்பிற்கு எதிராக அர்ச்சனா களமிறங்கியுள்ளார். விசித்ராவுக்கு டூத் பிரஷ் தராமல் மாயா கேப்டன்ஷிப் அதிகாரத்தை காட்டிட, சமைக்க முடியாது என விசித்ரா ஸ்மால் பாக்ஸ் அதிகாரத்தை காட்டினார். இதனால் பிக்பாஸில் ஏராளமான சண்டைகள் ஏற்பட்டன.