The Village: அட.. ஆர்யா நடிப்பில் செம திகில் இணைய தொடர்.. 'தி வில்லேஜ்' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஆர்யா நடித்திருக்கும் 'தி வில்லேஜ்' ஹாரர் சீரிஸின் ஓடிடி ரிலீஸின் டீசர் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

தி வில்லேஜ்

ஆர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய ஹாரர் சீரிஸ் ‘தி வில்லேஜ்’. மில்லிந்த் ராவ் இயக்கியிருக்கும் இந்தத் தொடருக்கு ‘ஜில் ஜங் ஜக்’ படத்தின் இயக்குநர் தீரஜ் வைதி மற்றும் தீப்தி கோவிந்தராஜன் திரைக்கதை எழுதியுள்ளார்கள். ஸ்டுடியோ சக்தி ப்ரோடக்‌ஷன்ஸ் இந்தத் தொடரை தயாரித்துள்ளது.  ஆர்யா, திவ்யா பிள்ளை, ஆழியா, ஆடுகளம் நரேன் ஜார்ஜ் மாயன், பி. என் சன்னி, முத்துக்குமார் கே, கலைராணி எஸ்.எஸ், ஜான் கொக்கென், பூஜா, வி ஜெயபிரகாஷ், அர்ஜுன் சிதம்பரம் மற்றும் தலைவாசல் விஜய் உள்ளிட்டவர்கள் இந்த தொடரின் நடித்துள்ளார்கள்.

Continues below advertisement

ஹாரர் ட்ராக்கைத் தொடங்கிய ஆர்யா

சமீப காலங்களில் ஆர்யா வழக்கமான கமர்ஷியல் கதைகளைத் தவிர்த்து சற்று ஃபேண்டஸியான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். சக்தி செளந்தராஜன் இயக்கத்தில் கடந்த ஆண்டு கேப்டன் படத்தில் நடித்திருந்தார் ஆர்யா. ஏலியன் கான்செப்ட்டை மையமாக வைத்து உருவான இந்தப் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யத் தவறியது.

தற்போது மீண்டும் ஒருமுறை அதே மாதிரியான கதையில் ஆர்யா நடித்துள்ளார். வரும் நவம்பர் 24ஆம் தேதி  அமேசான் பிரைமில் வெளியாக இருக்கும் தி வில்லேஜ் வெப் சீரிஸின் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது.  தன்னுடைய குடும்பத்தை ஒரு ஆபத்தில் இருந்து காப்பாற்றும் ஒரு சாதாரண மனிதனாக ஆர்யா இந்தப் படத்தில் நடித்துள்ளார். கோரமான முகங்களுடன்  ஜாம்பீக்கள் நிறைந்த உலகமாக இந்த டீசர் அமைந்திருக்கிறது.   தன்னுடைய முந்தையப் படத்தைப் போல் இல்லாமல் ஆர்யாவின் இந்த முயற்சி நிச்சயம் வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கலாம்.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola