மயிலாடுதுறை அருகே கோனேரிராஜபுரம் கிராமத்தில் பழங்கால 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கற்சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதை அடுத்து தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த கோனேரிராஜபுரத்தில் விவசாய பணியின் போது பள்ளம் தோண்டிய போது வித்தியாசமான அம்பாள் கற்சிலை ஒன்று கிடைத்துள்ளது. இதனை அடுத்து அந்த கிராமவாசிகள் குத்தாலம் வட்டாட்சியர் சித்ராவிற்கு சிலை கிடைத்தது குறித்து தகவல் தெரிவித்தார்.
Jammu Kashmir Earthquake: ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோளில் 3.5 ஆக பதிவு..
இதையடுத்து அங்கு விரைந்து சென்ற அதிகாரிகள் சிலையைக் கைப்பற்றி குத்தாலம் வட்டாட்சியர் அலுவலகம் கொண்டு சென்றனர். இதனை தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை தொல்லியல் அலுவலர் வசந்தகுமார், குத்தாலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். 3 அடி உயரம், 2 அடி அகலம் மற்றும் 1.5 அடி தடிமனில் சுமார் 100 கிலோ எடையில் அமைந்த அச்சிலை தவ்வையின் தெய்வச் சிலை என்றும், காக்கை கொடியுடன் அமைந்த தவ்வை சிலையின் இருபுறங்களிலும் மாந்தன், மாந்தை என்ற பிள்ளைகளின் உருவங்களும் பொறிக்கப்பட்டுள்ளது.
Israel - Hamas War: 266 பேர் பலி- ஹமாஸ் படைக்கு அமெரிக்கா எச்சரிக்கை? உலக தலைவர்கள் இஸ்ரேல் வருகை
இந்த சிலை 10 -ஆம் நூற்றாண்டை சார்ந்தது என்பதால் அதனை தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையில் தொல்பொருள் பாதுகாப்பு பிரிவில் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆதிகாலம் தொடங்கி 13-ஆம் நூற்றாண்டு வரை தமிழர்கள் கொற்றவைக்கு அடுத்து அதிகம் வழிபட்ட தெய்வமாக தவ்வை இருந்துள்ளது. வடவர்களின் வரவுக்கு பிறகு தவ்வை என்கிற மூத்ததேவி காலப்போக்கில் மூதேவி என குறிப்பிடப்பட்டு ஒதுக்கப்பட்டது.தவ்வை என்பவர் விஷ்ணுவின் மனைவியும் லட்சுமிதேவியின் மூத்த சகோதரியும் ஆவார். இவர் பெண் இந்து சமய பெண் தெய்வங்களுள் ஒருவராவார்.
இவருக்கு தவ்வை ஜேஷ்டா தேவி , அலட்சுமி போன்ற பெயர்களும் உண்டு. தவ்வை என்ற பெயரில் இவரை தமிழ் நூல்கள் குறிப்படுகின்றன. மூதேவி - ஸ்ரீதேவி குறித்து திருவள்ளுவர் தனது 167-வது குறளில் குறிப்பிட்டுள்ளார். தமிழர்களின் பெண்தெய்வம் மெல்ல மெல்ல துடைத்தெறியப்பட்டது என இலக்கிய வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.