Highest Opening : ஜவானை பின்னுக்கு தள்ளிய லியோ.. முதல் நாளே பாக்ஸ் ஆஃபீஸை தெறிக்கவிட்ட இந்திய திரைப்படங்கள்!
இந்திய சினிமா வரலாற்றில் வெளியாகிய முதல் நாளில் அதிக வசூல் ஈட்டிய ஐந்து இந்தியப் படங்களின் பட்டியலைப் பார்க்கலாம்.
ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ரானா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான பாகுபலி 2 வெளியான முதல் நாளில் மட்டுமே உலகளவில் ரூ.201 கோடி வசூல் செய்து அதிக வசூல் ஈட்டிய இந்தியப் படங்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்கிறது
இந்த வரிசையில் இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கும் படமும் ராஜமெளலி இயக்கத்தில் வெளியான படம்தான். 2022 ஆம் ஆண்டு வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் வெளியான முதல் நாளில் மட்டும் ரூ.190 கோடி வசூல் செய்தது.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான கே.ஜி.எஃப் இரண்டாம் பாகம் வெளியான முதல் நாளில் ரூ.162 கோடி வசூல் ஈட்டியது.
ஒரே நாளில் உலகம் முழுவதும் ரூ.148 கோடி வசூலித்து இந்த வரிசையில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ திரைப்படம்.
அட்லீ இயக்கத்தில் ஷாருக் கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படத்தை கடைசியில் நகர்த்தியது லியோ திரைப்படம். முதல் நாளில் ஜவான் திரைப்படம் மொத்தம் ரூ.127 கோடி வசூல் செய்தது