Big Boss 7 Tamil Vijay: பிக்பாஸ் வீட்டில் இருந்து அனுஷா வெளியேறுவார் என அனைத்து போட்டியாளர்களும் தெரிவித்த நிலையில், அதிரடி திருப்பமாக விஜய் வர்மா வெளியேற்றப்பட்டுள்ளார். 


கடந்த 1ம் தேதி தொடங்கிய பிக்பாஸ் சீசன் 7இல் கூல் சுரேஷ், பவா செல்லதுரை, அக்‌ஷயா உதயகுமார், பிரதீப் ஆண்டனி, விஷ்ணு விஜய்,அனன்யா ராவ், யுகேந்திரன் வாசுதேவன், மாயா கிருஷ்ணா, பூர்ணிமா ரவி, சரவண விக்ரம், வினுஷா தேவி, விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, ஜோவிகா விஜயகுமார், மணி சந்திரா, ரவீனா தாஹா ஆகிய 18 பேர் போட்டியாளர்களாக பங்கேற்றனர். பிக்பாஸ், சிறிய பிக்பாஸ் வீடு என இரு வீடுகளாக பிரிக்கப்பட்டு போட்டியாளர்களுக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டது. 


முதல் வாரத்தில் அனன்யா வெளியேற்றப்பட்ட நிலையில் 2வது வாரத்தில் பவா செல்லதுரை உடல்நலக்குறைவால் வெளியேறினார். அதை தொடர்ந்து 3வது வாரத்திற்கான எலிமினேஷன் ரவுண்ட் இருந்தது. இதில் யார் வெளியேற்றப்படுவார்கள் என பிக்பாஸ் போட்டியாளர்களை கமல்ஹாசன் கேட்டுள்ளார். அதில், அனைத்து போட்டியாளர்களும் வினுஷா தான் வெளியேற்றப்படுவார் என்றனர். வினுஷாவுக்கு உடல்நல பாதிப்பு இருப்பதாகவும், அவர் அழுது கொண்டிருப்பதாகவும், அவருக்கு இன்னும் நேரம் வேண்டும் என கேட்பதாலும் வினுஷா வெளியேற்றப்படுவார் என சக போட்டியாளர்கள் தெரிவித்தனர்.


ஆனால், போட்டியின் டிவிஸ்டாக எலிமினேஷன் விஜய் என கமல்ஹாசன் அறிவித்தார். போட்டியில் தொடங்கியதில் இருந்தே  செயலிலும் பேச்சிலும் விஜய் வன்முறையை காட்டி வந்தார். ஆக்சிஜன் பாட்டில் டாஸ்கில் பிரதீப்பை விஜய் தூக்கி அடித்ததும், ஆண்டனிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதும் பார்வையாளர்களை அதிர்ச்சி அடைய செய்தது. அதேபோல், கடந்த வாரம் தனக்கு வெளியே ஆட்கள் இருப்பதாக கூறி பிரதீப்பை விஜய் மிரட்டிய காட்சிகளும் சர்ச்சையானது. 


இந்த நிலையில் மூன்றாவது வார எலிமினேஷ்னாக பிக்பாஸ் வீட்டில் இருந்து விஜய் வர்மா வெளியேற்றப்பட்டுள்ளார். அப்போது பேசிய கமல்ஹாசன், போட்டி போட்டியாக இருக்க வேண்டுமே தவற, அதில் விளையாடும் போட்டியாளர்கள் உக்கிரமாக மாறக்கூடாது என அறிவுரை வழங்கினார். பின்னர், சக போட்டியாளர்களிடம் விடை பெற்று கொண்டு விஜய் வெளியேறினார். விஜய் பிரிந்த சோகத்தில் கூல் சுரேஷ் கண்ணீர் விட்டு அழுதார். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த விஜய்க்கு உள்ளே என்ன நடந்தது என்பது குறித்து போட்டுக்காட்டப்பட்டது. அதை பார்த்த விஜய், தான கொண்ட வன்முறையாக நடந்து கொண்டதை ஒப்பு கொண்டு போட்டியாளர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். 


மேலும் படிக்க: Bigg Boss 7 Tamil: இந்த வாரம் தரமான சம்பவம் இருக்கு போலயே... 5 வைல்டு கார்டு என்ட்ரி: ஷாக் கொடுத்த கமல்ஹாசன்!


28 Years Of Kuruthi Punal : 28 ஆண்டுகளை கடந்த கமல்ஹாசனின் குருதிப்புனல்: ஸ்பெஷல் தகவல்கள்