AIR Movie: ஹாலிவுட்டில் பட்டையை கிளப்பிய ஸ்போர்ட்ஸ் டிராமா.. அமேசானில் ரிலீசாகும் 'AIR' திரைப்படம்..!

பென் அஃப்லெக் இயக்கி, நடித்துள்ள ஏஐஆர் (AIR) திரைப்படம் மே 12ஆம் தேதி ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

Continues below advertisement

அமேசான் ஸ்டுடியோஸ், ஸ்கைடேன்ஸ் ஸ்போர்ட்ஸ், ஆர்டிஸ்ட்ஸ் ஈக்விட்டி மற்றும் மாண்டலே பிக்சர்ஸ் தயாரிப்பில் ஹாலிவுட் திரைப்படமான ஏஐஆர் (AIR) சமீபத்தில் வெளியாகி பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

Continues below advertisement

பென் அஃப்லெக் இயக்கி, நடித்துள்ள இந்தத் திரைப்படம், ஏப்ரல் 5 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. கான் கேர்ள் (Gone Girl), குட் வில் ஹண்டிங் (Goodwill Hunting) போன்ற ஹாலிவுட்டின் பிரபல திரைப்படங்களை இயக்கிய பென் அஃப்ளெக். இயக்கம் தாண்டி பிரபல நடிகர், எழுத்தாளர், தயாரிப்பாளர் என பன்முகக் கலைஞராக ஹாலிவுட்டில் வலம் வருகிறார்.  

ஸ்போர்ட்ஸ் டிராமா:

ஏர் ஜோர்டான் பிராண்டுக்காக விளையாட்டு மற்றும் கலாச்சார உலகில் புரட்சியை ஏற்படுத்திய அமெரிக்க கூடைப்பந்து வீரர் மைக்கேல் ஜோர்டானுக்கும் நைக்கின் கூடைப்பந்து பிரிவிற்கும் இடையே உள்ள பிணைப்பை பேசும் ஸ்போர்ட்ஸ் டிராமாவாக இந்தப் படம் அமைந்துள்ளது.

அனைத்தையும் இழந்த நிலையில் இருக்கும் ஒரு விளையாட்டுக்குழு மேற்கொள்ளும் சவாலான பங்கேற்பு, தன் மகனின் மகத்தான திறமையின் மதிப்பை அறிந்த ஒரு தாயின் சமரசமற்ற பார்வை, சிறப்பான  நிலையை எட்டப் போகும் ஒரு கூடைப்பந்து வீரரின்  சிறப்பு ஆகியவற்றை இந்தப் படம் பேசியுள்ளது.

மே 12 ரிலீஸ்:

இந்நிலையில், இந்தியாவில் ப்ரைம் வீடியோவில் மே 12ஆம் தேதி ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஏஐஆர் திரைப்படம் வெளியாக உள்ளது.  AIR திரைப்படம் முன்னதாக 92% சர்டிபைட் பிரெஷ் டொமாட்டோமீட்டர் ரேட்டிங்கையும், Rotten Tomatoes இல் 98%  ரேட்டிங்கையும் பெற்று கவனமீர்த்துள்ளது.

 

நைக் நிர்வாகி சோனி வக்காரோவாக பிரபல நடிகர் மாட் டாமன் மேவரிக் நடித்துள்ளார். நைக்கின் இணை நிறுவனர் பில் நைட்டாக பென் அஃப்லெக் நடித்துள்ளார். மேலும்,  ஜேசன் பேட்மேன், கிறிஸ் மெசினா, மேத்யூ மஹர், ஜார்ஜ் உள்ளிட்ட ஹாலிவுட் நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.

80களின் ஹாலிவுட்டின் மறக்க முடியாத சில பாடல்கள் இத்திரைப்படத்தின் சவுண்ட் டிராக்கில் இடம்பெற்றுள்ள நிலையில், இந்தப் பாடல்களும் ஹிட் அடித்துள்ளன.

மேலும் படிக்க: Producers Council Election: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி.. 2வது முறையாக தலைவரானார் ‘தேனாண்டாள்’ முரளி

PS 2 Box Office Collection: 4 நாள்களில் 200 கோடி...கலவையான விமர்சனங்கள் தாண்டி வசூலைக் குவிக்கும் பொன்னியின் செல்வன் பாகம் 2!

Continues below advertisement
Sponsored Links by Taboola