மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் விடாமுயற்சி திரைப்படம் திரையிடப்பட்ட திரையரங்கு முன்பு படத்திற்காக அஜித் ரசிகர்கள் வைத்துள்ள பேனர் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
இரண்டாண்டுகள் கழித்து வெளியான திரைப்படம்
கடந்த 2023 -ம் ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது நடிகர் அஜித் குமார் நடித்த துணிவு திரைப்படம் திரையரங்கில் வெளியாகியது. அதன் பிறகு 2 ஆண்டுகளாக அஜித் நடித்த திரைப்படங்கள் ஏதும் வெளியாகவில்லை. இதன்காரணமாக அஜித் ரசிகர்கள் கடும் ஏமாற்றத்தில் இருந்து வந்தனர். இந்த சூழலில் இந்த ஆண்டு பொங்கலுக்கு விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் சில தவிர்க்க முடியாத காரணங்களால் படம் வெளியாவது தள்ளி வைக்கப்பட்டது.

ரசிகர்கள் கொண்டாட்டம்
இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இன்று மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்து, அனிருத் இசையில், ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில், ஸ்ரீகாந்த் எடிட்டிங்கில் "விடாமுயற்சி" திரைப்படம் வெளியாகியுள்ளது. இரண்டு ஆண்டுகள் கழித்து திரைப்படம் வெளியானலும், இன்று விடாமுயற்சி திரைப்பட ரிலீஸை நடிகர் அஜித்தின் ரசிகர்கள் திருவிழா போல கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். நேற்று இரவு முதலே தமிழ்நாட்டின் பல்வேறு திரையரங்குகளில் இசை நிகழ்ச்சிகள், கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம், ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள் ஈடுப்பட்டுள்ளனர்.
அண்டை மாநிலம் சென்ற ரசிகர்கள்
தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு தான் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதனால், அஜித் ரசிகர்கள் தமிழ்நாட்டுக்கு அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா எல்லையோர மாவட்டங்களுக்கு விடாமுயற்சி படத்தைக் காண சென்றனர். மேலும் நெட்டிசன்கள், ரசிகர்கள் பலர் விடாமுயற்சி திரைப்படம் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
Pat Cummins : காயத்தில் சிக்கிய கம்மின்ஸ்.. கப்பு போச்சா? சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பே ஆடிபோன ஆஸி..
கவனத்தை ஈர்த்த பேனர்
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மற்றும் சீர்காழி பாலாஜி திரையரங்கில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் இன்று திரையிடப்பட்டுள்ளது. சீர்காழி திரையரங்கு வாசலில் அஜித் ரசிகர்கள் சுவரோட்டிகள், பேனர்கள் வைத்துள்ளனர். அதில் அரசியல் வேண்டாம், அஜித்தே போதும் என்றும் எழுதியுள்ளனர். இதேபோன்று தமிழக வெற்றிக்கழகம் சேந்தங்குடி கிளை என அச்சிட்டு "தலயின் ரசிகர்கள் தளபதியின் தொண்டர்கள்" என்ற வாசகத்துடன் நடிகர்கள் விஜய் அஜித் இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படத்துடன் 40 அடி நீளத்திற்கு டிஜிட்டல் பேனரையும் வைத்துள்ளனர். அவ்வழியே செல்லும் பொதுமக்கள் ஆச்சரியம் கலந்து ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர். மேலும் திரையரங்கு முன்பு ரசிகர்கள் ஆரவாரத்துடன் கேக் வெட்டியும், நடனம் ஆடியும் அஜித் மற்றும் முன்னனி நடிகர்கள் நடித்து வெளியாகியுள்ள விடாமுயற்சி திரைபடத்தை கொண்டாடி வருகின்றனர்.