தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். பீஸ்ட் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த செல்வராகவன் சாணிக்காயிதம் படத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

Continues below advertisement





இந்த நிலையில், இயக்குனர் மோகன்ஜி இயக்கத்தில் செல்வராகவன் பகாசூரன் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் எனப்படும் முதல் லுக்கை இன்று செல்வராகவன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், படத்தின் டீசர் வரும் 28-ந் தேதி ( நாளை மறுநாள்) வெளியாகும் என்று அறிவித்துள்ளார்.


தற்போது நானே வருவேன் படத்தை இயக்கியுள்ள செல்வராகவன், இயக்குனர் மோகன் ஜி நடிப்பில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். தமிழ் சினிமாவில் பழைய வண்ணாரப்பேட்டை மூலமாக இயக்குனராக அறிமுகமான மோகன் ஜி இயக்கத்தில் உருவாகிய திரௌபதி மற்றும் ருத்ரதாண்டவம் படங்கள் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.




இந்த சூழலில், மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன் நடிப்பதாக வெளியான அறிவிப்பு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். தேவராஜ் எடிட்டிங் செய்துள்ளார். கலை இயக்குனராக எஸ்.கே. பணியாற்றறுகிறார். இந்த படத்தை ஜி.எம். பிலிம் கார்ப்பரேஷன் தயாரிக்கிறது. நடிகரும், ஒளிப்பதிவாளருமான நடராஜ் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார்.


மோகன் ஜி யின் திரௌபதி மற்றும் ருத்ரதாண்டவம் படங்கள் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியதால் நாளை மறுநாள் வெளியாகும் பகாசூரன் படத்தின் டீசர் மீதும் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.




பிரபல இயக்குனர் செல்வராகவன் காதல் கொண்டேன் படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். முதல் படத்திலே தமிழ் திரையுலகத்தை திரும்பி பார்க்க வைத்த செல்வராகவன் 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் என்று தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மறக்க முடியாத திரைப்படங்களை விருந்தாக்கினார்.


சமீபகாலமாக நடிப்பில் கவனம் செலுத்தி வரும் முதலில் கீர்த்தி சுரேஷிடன் சாணிக்காயிதம் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார், ஆனால், விஜய்யுடன் அவர் நடித்த பீஸ்ட் படம் முதலில் வெளியானது. சாணிக்காயிதம் படத்தில் மிரட்டலான நடிப்பை வெளியிட்ட செல்வராகவன் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த அற்புதமான நடிகர் என்று விமர்சகர்களாலும், ரசிகர்களாலும் பாராட்டப்பட்டார். 


மேலும் படிக்க : Bigg Boss 6 Tamil: ஒரே ஒரு ப்ரொமோ... ஊரே புறப்படத் தயாராகும் பிக்பாஸ் வீடு... எகிறும் சீசன் 6!


மேலும் படிக்க : Ansiba Hassan: ஜார்ஜ் குட்டி மகளா இது... க்ளாமரில் டாஃப் கியர் போட்டு ஓவர் ஸ்பீடில் செல்லும் அன்சிபா அசன்!