’கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ தொடரின் முந்தைய கதையாக ’ஹவுஸ் ஆஃப் த டிராகன்’ தொடரின் முதல் எபிசோட் முன்னதாக வெளியாகி டாக் ஆஃப் த ட்வுன் ஆகியுள்ளது.


இன்னும் இரண்டு நாள்களில் இத்தொடரின் அடுத்த எபிசோட் வெளியாக உள்ள நிலையில், ‘கிங் விசேரிஸ்’ கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் வித்தியாசமான காரணத்துக்காக இந்தியாவில் ட்ரெண்ட் ஆகியுள்ளார்.


பார்ப்பதற்கு இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் போல் அப்படியே இருக்கிறார் கிங் விசேரிஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் பேடி கன்சிடைன். இந்நிலையில் இவர்கள் இருவரின் உருவ ஒற்றுமையை ஆச்சரியத்துடன் பற்றி பகிர்ந்து நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.


 






ட்விட்டரில் அக்‌ஷய் குமார் எப்படி டார்கேரியன் உலகத்துக்குள் நுழைந்தார் என்று கேள்வி எழுப்பியும், சிலாகித்தும் ஃபயர் விட்டு ட்ரெண்ட் செய்து வருகின்றனர் அவரது ரசிகர்கள்!


 






கிங் விசேரிஸ் டார்கேரியன், இளவரசி ரெனிரா, ஏமா அரய்ன், விசேரிஸ் தம்பி டேமன் டார்கேரியன் ஆகிய கதாபாத்திரங்களை சுற்றிச் சுழலும் ஹவுஸ் ஆஃப் த ட்ராகன் தொடர் பெரும் எதிர்ப்பார்ப்புகளை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.