எனக்கு எதெல்லாம் பிடிக்காத வார்த்தைகளாக இருந்ததோ அவைதான் எனக்கு பிடித்த வார்த்தையாக மாறியது என்று கூறியுள்ளார் பிகில் பாண்டியம்மா.


தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான ரோபோ சங்கரின் மூத்த மகள்தான் இந்திரஜா (பாண்டியம்மா). ரோபோ சங்கரின் மகள் என்பதையும் தாண்டி பிகில் படம் மூலம் பிகில் பாண்டியம்மா என தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிக்கொண்டார் இந்திரஜா.


பிகில் படத்தில் இவர் வரும் காட்சிகள் குறைவு என்றாலும், தான் வரும் காட்சிகள் அனைத்தையும் தனக்கான களமாக மாற்றி, தனது நடிப்பினால் அனைவரையும் கவர்ந்துள்ளார் பாண்டியம்மா. இவரின் இந்த புகழுக்கு முக்கியமான காரணங்களில் ஒன்று அவரின் உடல் எடைதான்.


தனது மைனஸை பிளஸ்ஸாக மாற்றிக் கொண்டார் பாண்டியம்மா.


அண்மையில் இது குறித்து ஒரு யூடியூப் சேனலுக்கு அவர் பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர் "எனக்கு முன்பெல்லாம் குண்டு, குண்டம்மா, தடிச்சி, குண்டாத்தி, வெயிட் போட்டுட்ட, ஏன் இவ்வளவு குண்டா இருக்க மாதிரி யாராவது கேட்டால் ரொம்ப கடுப்பாயிடும். நான் ரொம்ப கோபப்படுவேன். ஆனால் பிகில் படம் என் பார்வையை மாத்திடுச்சு. அந்த குறிப்பிட்ட காட்சியில் என்னை அப்படி விஜய் சார் கூப்பிட்ட பின்னர் எனக்கு இப்போ ரொம்ப பிடிச்ச வார்த்தையாக அது மாறிவிட்டது. அட்லீ சார், விஜய் சார் ரெண்டு பேருக்குமே நான் நன்றி சொல்ல விரும்புகிறேன்.


இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


பிகில் படத்தில் பாண்டியம்மாளாக நடித்த இந்திரஜாவைப் பார்த்து ஓடச் சொன்னா உருள்ற, குண்டம்மா குண்டம்மா என்று கூறியது சர்ச்சையானது. விஜய் போன்ற ஒரு பெரிய நடிகரே இவ்வாறாக உருவக் கேலியை ஊக்குவிக்கலாமா என்ற விமர்சனங்கள் எல்லாம் எழுந்தன.


ஆனால் அதையெல்லாம் புறந்தள்ளும் வகையில் பாண்டியம்மாளின் இந்தப் பேச்சு உள்ளது.


என்னதான் பிகில் பாண்டியம்மாளின் பேட்டி முட்டுக் கொடுத்தாலும் கூட தமிழ் சினிமாவும் உருவக் கேலியும் பிரிக்க முடியாதது தான்.


குண்டு கல்யாணம் என்ற ஒரு நடிகர் இருந்தார். உசிலை மணி, பிந்து கோஸ் ஏன் நம்ம ஆர்த்தி வரை தமிழ் சினிமா உருவக் கேலி செய்வதற்காக வளர்த்துவிட்டது.


காமெடி என்றாலே உருவக்கேலி என்ற நிலை மேலோங்கியிருந்த காலம் கொஞ்சம் மாறியுள்ளது. இருந்தாலும் பெரிய அளவில் மாற்றம் வர வேண்டும்.


உருவக் கேலியை எந்த விதத்திலும் ஊக்குவிக்கக் கூடாது என்ற கொள்கை சினிமாவுக்குள் வர வேண்டும். படித்த இளைஞர்கள் புரட்சிகர சிந்தனையுள்ள இளைஞர்கள் சினிமவுக்கு வரத் தொடங்கியுள்ளனர். அதனால் விரைவில் சினிமாவின் இந்த அருவருப்பான முகமும் மாறும் என்று எதிர்பார்போம்.