Baakiyalakshmi Sathish: பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் கோபி கேரக்டரில் நடித்த சதீஷ் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தைப் பெற்றார். கோபி நெகட்டிவ் கேரக்டரில் நடித்தாலும், ரசிகர்களை பெரிதாக ஈர்த்த நடிகராகவே சதீஷ் உள்ளார். டிஆர்பியில் முதலிடத்தில் இருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா, கோபி, ராதிகா உள்ளிட்டோரின் லீட் கேரக்டர்களில் நடிப்பதால் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ரசிகர்களிடையே அதிக வரவேற்பு உள்ளது. 

 

இந்த நிலையில் சென்னையை தாக்கிய மிக்ஜாம் புயலால் தானும் பாதிக்கப்பட்டுள்ளதாக சதீஷ் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோவில், “எங்க வீட்ல கரெண்ட் வந்துருச்சாம். எங்க அக்கா வீட்ல இருந்து கிளம்பப் போறோம். என்ன தான் சொந்தக்காரங்க வீடு, ஃபிரண்ட்ஸ் வீடு என்று இருந்தாலும் நம்ம வீடு போல இருக்க முடியுமா? என் வீட்ல இருக்கற நாய்க்குட்டி, பூனைக்குட்டி, காக்காக்குட்டி, குருவி என எல்லாரும் எனக்காக வெயிட் பண்ணுவாங்க. இதுக்கு எல்லாம் மேல மழை பெய்ததால் என் வீட்ல கொசு பண்ணையே அதிகமா இருக்கும். கொசுக்கடிக்கு தேங்காய் எண்ணெய் தடவினால் பெஸ்ட். தேங்காய் எண்ணெய் தடவினால் கொசு கிட்டையே வராது” எனப் பேசியுள்ளார். 

 





 

நடிகர் சதீஷ் மட்டும் இல்லாமல், திரைத்துறை நடிகர்கள் விஷ்ணு விஷால், அமீர் கான், ரோபோ ஷங்கர், மன்சூர் அலிகான், நடிகை நமீதா உள்ளிட்டோர் மழை வெள்ளத்தில் சிக்கிய வீடியோ முன்னதாக வெளியானது. 

 

கடந்த 4ஆம் தேதி மிக்ஜாம் புயல் சென்னையைக் கடந்து சென்ற நிலையில், கனமழை பெய்து மாநகரமே வெள்ளத்தால் சூழ்ந்தது. பெரும்பாலான இடங்களில் இன்னும் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வட சென்னை பகுதிகளில் சூழ்ந்துள்ள மழைநீரை அகற்றும் பணி இன்றும் நடைபெற்று வருகிறது.