இந்திய சினிமாவின் 68ஆவது தேசிய விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்ற நிலையில், தமிழ் சினிமாவில் சூரரைப் போற்று விருதுகளை வாரிக் குவித்தது போல் மலையாளத்தில் அய்யப்பனும் கோஷியும் 4 விருதுகளை வென்று கவனம் ஈர்த்துள்ளது.


விருதுவென்ற மலையாளப் படங்கள்


தேசிய விருதுகள் பட்டியலில் மலையாள சினிமாவின் ஆதிக்கம் தவிர்க்க முடியாத ஒன்று. சிறந்த கதையம்சம் கொண்ட மலையாள சினிமாக்கள் பல ஆண்டுகளாகவே தேசிய விருதுகள் வெற்றிப் பட்டியலில் தொடர்ந்து கோலோச்சி வருகின்றன.


அய்யப்பனும் கோஷியும்




அந்த வகையில் 68ஆவது தேசிய விருதுகள் வழங்கும் விழாவில், 'அய்யப்பனும் கோஷியும்’, ’மாலிக்’ உள்ளிட்ட படங்கள் மொத்தம் ஆறு விருதுகளைக் குவித்துள்ளன.


 மலையாளத்தில் பிஜு மேனன், பிரித்விராஜ் ஆகியோர் நடிப்பில் 2020ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ’அய்யப்பனும் கோஷியும்’.


பிஜு மேனன் அய்யப்பன் என்னும் கதாபாத்திரத்திலும், ப்ரித்விராஜ் கோஷி என்னும் கதாபாத்திரத்திலும் நடிக்க இவர்களது ஈகோ மோதல்கள் மிக யதார்த்தமாக திரையில் படமாக்கப்பட்டிருக்கும்.


மொத்தம் 6 விருதுகள்


வெளியானது முதலே இப்படம் பெரும் கவனத்தை ஈர்த்து விமர்சனரீதியாக பெரும் வெற்றிபெற்ற நிலையில், தெலுங்கு, இந்தி மொழிகளில் படம் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.


இந்நிலையில் இன்று அறிவிக்கப்பட்ட 68ஆவது தேசிய விருதுகள் வழங்கும் விழாவில்
சிறந்த இயக்குநர் - சாச்சி
சிறந்த துணை நடிகர் - பிஜூ மேனன், சிறந்த பின்னணிப் பாடகி - நஞ்சம்மா,
சிறந்த சண்டைக் காட்சி ஆகிய விருதுகளை வென்றுள்ளது.




மேலும், சிறந்த மலையாளப் படமாக ’திங்களாழ்ச்ச நிஷ்ச்சயம்' படமும், சிறந்த இசை வடிவமைப்புக்கான விருது மாலிக் படத்துக்கும் கிடைத்துள்ளது. 


இதேபோல் தமிழில் சூரரைப் போற்று, மண்டேலா, சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் உள்ளிட்ட படங்கள் மொத்தம் 10 விருதுகளைக் குவித்துள்ளன.




மேலும் படிக்க: 68th National Film Awards 2022: சிறந்த நடிகை.. சூரரைப்போற்று பொம்மி அபர்ணா பாலமுரளிக்கு தேசிய விருது..


Best Actor Award: நீ ஜெயிச்சிட்ட மாறா.. பிறந்தநாள் பரிசாக தேசிய விருதை தட்டித்தூக்கிய சூர்யா..!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண