68 ஆவது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் சூரரைப்போற்று படத்திற்காக நடிகர் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று 68வது தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அரசின் திரைப்பட விழாக்கள் இயக்குநரகம் அறிவித்துள்ளது.
திரைப்படம் எடுக்க உகந்த நகரம்
அதில் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் டிசம்பர் 31 ஆம் தேதி வரை திரைப்பட வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட திரைப்படங்கள் விருதுக்கு தகுதிப் பெற்றுள்ளது. இந்தியாவில் திரைப்படம் எடுக்க உகந்த நகரமாக மத்தியப்பிரதேசம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தட்டித்தூக்கிய தமிழ் சினிமா
சிறந்த படம் - சூரரைப்போற்று
சிறந்த நடிகர் - நடிகர் சூர்யா (சூரரைப்போற்று ) ( அஜய் தேவ்கனுடன் பகிர்ந்து கொள்கிறார்)
சிறந்த பின்னணி இசை - ஜிவி பிரகாஷ் குமார்
சிறந்த நடிகை - அபர்ணா பாலமுரளி (சூரரைப்போற்று )
சிறந்த திரைக்கதை - சுதா கொங்கரா மற்றும் ஷாலினி உஷா நாயர் (சூரரைப்போற்று)
சிறந்த வசனம் - இயக்குநர் மடோனா அஸ்வின் ( மண்டேலா)
இதேபோல் tanhaji unsung warrior என்ற இந்தி படத்திற்காக நடிகர் அஜய் தேவ்கனுக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த இயக்குநர் விருது மலையாளத்தில் அய்யப்பனும் கோஷியும் பட இயக்குநர் கே.ஆர்.சச்சிதானந்தனுக்கு கிடைத்துள்ளது. சிறந்த துணை நடிக்கருக்கான விருதும் அதே படத்தில் நடித்த பிஜூ மேனனுக்கு விருது கொடுக்கப்பட்டுள்ளது. சிறந்த படத்தொகுப்பாளருக்கான விருது சிவரஞ்சினியும், இன்னும் சில பெண்களும் படத்தில் படத்தொகுப்பாளராக பணியாற்றிய ஸ்ரீகர் பிரசாத் வழங்கப்பட்டுள்ளது.