Mandela Movie Awards: மண்டேலா திரைப்படத்திற்காக சிறந்த அறிமுக இயக்குநர் விருதுபெறும் மடோன் அஸ்வின்..

National Film Awards 2022: மண்டேலா திரைப்படத்திற்காக சிறந்த அறிமுக இயக்குனர் மற்றும் சிறந்த வசனத்திற்காக விருது பெறுகிறார் மடோன் அஸ்வின்.

Continues below advertisement

Mandela Movie Awards:: மண்டேலா திரைப்படத்திற்காக சிறந்த  அறிமுக இயக்குனர் மற்றும் சிறந்த வசனத்திற்காக விருது பெறுகிறார் மடோன் அஸ்வின். 68வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த அறிமுக இயக்குனர் மற்றும் வசனகர்த்தாவுக்கான விருது, யோகிபாபு நடித்து ஓடிடி தளத்தில் வெளியான மண்டேலா படத்திற்காக இயக்குனர் மடோன் அஸ்வினுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

Continues below advertisement

சிறந்த அறிமுக இயக்குனருக்காக வழங்கப்படும் இந்திரா காந்தி விருதினை மண்டேலா படத்திற்காக படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வினுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தமிழில் வெளிவந்த படங்களில் ஓடிடி தளத்தில் வெளிவந்த படங்களே தேசிய விருதினைப் பெற்றுள்ளது. இவ்வரிசையில் சூரரைப் போற்று அமேசானுலும், மண்டேலா நெட்பிளிக்ஸிலும் சிவரஞ்சினியும் சில பெண்களும் சோனி லைவ்விலும் வெளியாகின. இந்த  மூன்று படங்களும்  இந்தாண்டுக்கான தேசிய விருதுகளில் முத்திரை பதித்துள்ளன. 

68வது தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அரசின் திரைப்பட விழாக்கள் இயக்குநரகம் அறிவித்துள்ளது. 

அதில் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் டிசம்பர் 31 ஆம் தேதி வரை திரைப்பட வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட திரைப்படங்கள் விருதுக்கு தகுதிப் பெற்றுள்ளது.  இந்தியாவில் திரைப்படம் எடுக்க உகந்த நகரமாக மத்தியப்பிரதேசம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

மேலும், தமிழில் விருதுகள் பெற்றவர்கள் பற்றிய விபரங்களுக்கு,

சிறந்த படம் - சூரரைப்போற்று 
சிறந்த நடிகர் - நடிகர் சூர்யா (சூரரைப்போற்று ) ( அஜய் தேவ்கனுடன் பகிர்ந்து கொள்கிறார்)
சிறந்த பின்னணி இசை - ஜிவி பிரகாஷ் குமார் 
சிறந்த நடிகை - அபர்ணா பாலமுரளி (சூரரைப்போற்று )
சிறந்த திரைக்கதை - சுதா கொங்கரா மற்றும் ஷாலினி உஷா நாயர் (சூரரைப்போற்று)
சிறந்த வசனம் - இயக்குநர் மடோனா அஸ்வின் ( மண்டேலா) 

இதேபோல் tanhaji unsung warrior  என்ற இந்தி படத்திற்காக நடிகர் அஜய் தேவ்கனுக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த இயக்குநர் விருது மலையாளத்தில் அய்யப்பனும் கோஷியும் பட இயக்குநர் கே.ஆர்.சச்சிதானந்தனுக்கு கிடைத்துள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

Continues below advertisement