அயலான் பட விஎஃப்எக்ஸ் குழுவினரை நடிகர் சூர்யா வெகுவாகப் பாராட்டியுள்ளது படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


அசத்திய அயலான்


சிவகார்த்திகேயன் நடித்து, ஆர்.ரவிக்குமார் இயக்கிய ‘அயலான்’ திரைப்படம் கடந்த ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் ரிலீசாக வெளியானது. தமிழ் சினிமாவில் முதல் முயற்சியாக ஏலியனுடன் திரையைப் பகிர்ந்ததுடன் ஆடி, பாடி, சண்டை செய்து சிவகார்த்திகேயன் கோலிவுட் வரலாற்றில் தடம் பதித்துள்ளார். அவருடன் இந்தப் படத்தில் ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு,  கருணாகரன், பானுப்பிரியா, ஈஷா கோபிகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.


ஹாலிவுட், பாலிவுட் திரையுலகில் ஏலியன் சார்ந்த படங்கள் ஏற்கெனவே வந்திருந்தாலும் தமிழ் சினிமாவில் குழந்தைகளைக் குறிவைத்து முதன்முறையாக ஏலியனுடன் கைகோர்த்து சிவகார்த்திகேயன் திரையில் தோன்றிய நிலையில், படத்தின் விஎஃபெக்ஸ் காட்சிகள் தொடர்ந்து பாராட்டுகளைக் குவித்து வருகின்றன.ஏலியன் எனும் வெப்பனைக் கொண்டு சிவகார்த்திகேயன் குழந்தைகளை குடும்பத்துடன் திரைக்கு வரவழைத்து, வசூலிலும் கல்லா கட்டி வருகிறார்.


பாராட்டித் தள்ளிய சூர்யா


இந்நிலையில், அயலான் திரைப்படத்தின் விஎஃப்எக்ஸ் குழுவினரை நடிகர் சூர்யா பாராட்டித் தள்ளியுள்ளது அப்படக்குழுவினரை உச்சகட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அயலான் படத்துக்கு விஎஃப்எக்ஸ் பணிகள் மேற்கொண்ட Phantom நிறுவனத்தைப் பாராட்டியுள்ள நடிகர் சூர்யா, “பாண்டம் செய்துள்ள பணியினை மிகவும் ரசித்தேன். எதையும் சிறப்பாக செய்ய வேண்டும் என்ற உங்கள் தாகத்தை இது காண்பிக்கிறது.  எங்கள் அனைவரின் இதயங்களையும் உங்கள் பணி வென்றுள்ளது” எனக் குறிப்பிட்டு ஒரு சிறு கடிதத்துடன், பூங்கொத்து ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.


 






இந்தத் தகவலை ஃபாண்டம் நிறுவனத்தின் விஎஃப்எக்ஸ் மேற்பார்வையாளர் பிஜாய் அற்புதராஜ் தன் எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும், சூர்யா தங்களுக்கு கால் செய்து வாழ்த்தியதாகவும், சூர்யாவின் இந்த செயலால் தாங்கள் அகமகிழ்ந்து போயுள்ளதாகவும் பிஜாய் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.


மேலும் படிக்க: அன்னபூரணி விவகாரம்: ”கோயில்களுக்கு செல்கிறேன்.. அப்படி நினைக்கவில்லை..” வருத்தம் தெரிவித்த நயன்தாரா


RJ Balaji: கோலிவுட்டிலும் நெப்போடிஸம்! விஜய் சேதுபதி போன்றவர்கள் எங்களை ஊக்குவிக்கிறார்கள் - ஆர்.ஜே.பாலாஜி