பேபி ஜான்


அட்லீ விஜயை வைத்து இயக்கிய தெறி படத்தின் இந்தி ரீமேக் ஆக உருவாகியிருக்கும் பேபி ஜான் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. வருன் தவான், கீர்த்தி சுரேஷ் , வமிகா கப்பி , ஜாக்கி ஷ்ராஃப் இப்படத்தில் நடித்துள்ளார்கள். தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பிரியா அட்லீ இப்படத்தை தயாரித்துள்ளார்.


விஜயின் தெறி படத்தின் அதே திரைக்கதையை காட்சி அமைப்புகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உருவாகியிருக்கும் படம் பேபி. தமிழ் ரசிகர்களை பெரியளவில் இப்படம் கவருமா என்கிற கேள்வி உள்ளது என்றாலும் இந்தியில் இப்படத்திற்கு இதுவரை பாசிட்டிவான விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன


சர்ச்சையை கிளப்பிய பேபி ஜான் படத்தின் காட்சி 


முன்னதாக அட்லீ இயக்கிய தெறி படத்தில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்தவரை கொன்று பாலத்தின் அடியில் தொங்கவிடும் படியான காட்சி இடம்பெற்றிருந்தது. இந்த காட்சி சமூக செயற்பாட்டாளர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. குற்றம் செய்தவரை அதே அளவிற்கு கொடூரமான கொலை செய்வது தான் நியாயமா என்கிற கேள்வி விமர்சகர்கள் தரப்பில் எழுப்பப்பட்டது. மேலும் போலீஸாக இருக்கும் விஜய் இந்த மாதிரியான செயல்களை செய்வதை நியாயப்படுத்துவது  காவல்துறையின் வன்முறைகளை ஊக்குவிப்பதாக அமையும் என்று தெரிவித்தனர்.


தற்போது பேபி ஜான் திரைப்படம் வெளியாகியிருக்கும் நிலையில் இந்த படத்தில் தெறி படத்தை விட கொடூரமான காட்சி இடம்பெற்றுள்ளது. குற்றம் செய்தவனை நாயகனாக வருன் தவான் உயிருடன் தீ வைத்து கொல்கிறார். முழுக்க முழுக்க மாஸ் காட்சியாக இந்த காட்சி உருவாக்கப்பட்டுள்ள விதம் ரசிகர்களின் நரம்புகள் புடைக்க கிளர்ச்சியுணர்வை அளிக்கும் விதமாக அமைந்துள்ளது. பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு இதுதான் தண்டனை என்றும் பலர் இதை ஆதரித்து பதிவிட்டு வருகிறார்கள். பாதிக்கப்பட்டவருக்கு நீதி அளிப்பதாக நினைத்துக் கொண்டு அட்லீ மீண்டும் மீண்டும் வன்முறையை விதைப்பதாக விமர்சகர்கள் விமர்சித்து உள்ளார்கள் 


தெறி இந்தி டப்பிங் பாத்திரலாம்... மறுபடியும் அட்லீ வேலையை காடிட்டாரு..பேபி ஜான் விமர்சனம்


Trisha : என் மகன் இறந்துவிட்டான்...நடிகை த்ரிஷா வீட்டில் மரணம்