பேபி ஜான்
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான படம் தெறி. 8 ஆண்டுகள் கழித்து இப்படத்தின் இந்தி ரீமேக் ஆக உருவாகியிருக்கும் படம் பேபி ஜான். அட்லியின் மணைவி பிரியா அட்லீ தயாரித்திருக்கும் இப்படத்தை காலீஸ் இயக்கியுள்ளார். வருன் தவான் நாயகனாக நடித்துள்ளார். கீர்த்தி சுரேஷ் இப்படத்தின் வழி இந்தி திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். வமிகா கப்பி , ஜாக்கி ஷ்ராஃப் , மற்றும் சல்மான் கான் சிறக்கு தோற்றத்தில் நடித்துள்ளார்கள். தமன் இசையமைத்துள்ளார். கிறிஸ்துமஸ் முன்னிட்டு இன்று திரையரங்கில் வெளியாகியிருக்கும் பேபி ஜான் திரைப்படத்தின் விமர்சனத்தைப் பார்க்கலாம் .
பேபி ஜான் விமர்சனம்
ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்த ஜான் தனது மகளுடன் வசித்து வருகிறார். தெறி படத்தில் எமி ஜாக்ஸன் நடித்த ஆசிரியர் கதாபாத்திரத்தில் வமிகா கப்பி நடித்துள்ளார். மகேந்திரன் நடித்த வில்லன் கதாபாத்திரத்தில் ஜாக்கி ஷ்ராஃப் நடித்துள்ளார் . சமந்தா கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்லார் மற்றபடி தெறி படத்தின் அதே கதையை எந்த வித மாற்றமும் இல்லாமல் எடுத்துள்ளார்கள்
தெறி படம் வெளியாகி 8 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் தற்போது ரசிகர்களின் ரசனை மாறியுள்ளது. சுமாரான கதைக்களமாக இருந்தாலும் விஜய் மாதிரியான ஒரு ஸ்டார் இப்படத்தில் இருந்தது கமர்சியலாக இப்படத்தை வெற்றிபெற செய்தது. ஆனால் 8 ஆண்டுகள் கழித்து ரசிகர்களின் ரசனையைப் பற்றிய எந்த வித புரிதலும் இல்லாமல் அதே கதையை கொஞ்சம் தூக்கலான ஆக்ஷன் காட்சிகளோடு எடுத்து வைத்திருக்கிறார்கள்.
இரண்டு படத்திற்கும் இருக்கும் ஒரே வித்தியாசம் என்றால் இந்தியில் சல்மான் கான் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளது மட்டும்தான். தமனின் பின்னணி இசை ரசிகர்களை எங்கேஜ் செய்யும் விதமாக உள்ளது.
நடிப்பைப் பொறுத்தவரை வருன் தவான் இரு கதாபாத்திரங்களில் வித்தியாசம் காட்ட முயற்சி செய்திருக்கிறார். கீர்த்தி சுரேஷ் சமந்தா ஏற்கனவே நடித்த கதாபாத்திரத்திடம் இருந்து வித்தியாசம் காட்டியிருக்கிறார்.
பேபி ஜான் படம் இந்தி ரசிகர்களுக்கு புதுவிதமான அனுபவமாக இருக்கலாம். ஆனாம் தென் இந்திய ரசிகர்களுக்கு இப்படம் எந்த வித புது அனுபவத்தையும் வழங்காது. அதற்கு பதிலாக யூடியூபில் இருக்கும் தெறி படத்தின் இந்தி டப்பிங் கூட பார்க்கலாம் என விமர்சகர்கள் குறிப்பிட்டு வருகிறார்கள்