பேபி ஜான் 


அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான படம் தெறி. 8 ஆண்டுகள் கழித்து இப்படத்தின் இந்தி ரீமேக் ஆக உருவாகியிருக்கும் படம் பேபி ஜான். அட்லியின் மணைவி பிரியா அட்லீ தயாரித்திருக்கும் இப்படத்தை காலீஸ் இயக்கியுள்ளார்.  வருன் தவான் நாயகனாக நடித்துள்ளார். கீர்த்தி சுரேஷ் இப்படத்தின் வழி இந்தி திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். வமிகா கப்பி , ஜாக்கி ஷ்ராஃப் , மற்றும் சல்மான் கான் சிறக்கு தோற்றத்தில் நடித்துள்ளார்கள். தமன் இசையமைத்துள்ளார். கிறிஸ்துமஸ் முன்னிட்டு இன்று திரையரங்கில் வெளியாகிய பேபி ஜான் அடுத்தடுத்த நாட்களில் வசூலில் சரிந்து வருகிறது. 


பேபி ஜான் வசூல் 


தெறி படத்தின் கதை பெரியளவில் புதிது கிடையாது என்றாலும் விஜய் போன்ற ஒரு பெரிய ஸ்டார் இருந்தது இப்படத்திற்கு பெரும் பாசிட்டிவாக அமைந்தது. 8 ஆண்டுகள் கழித்து இந்த கதையில் பெரியளவில் எந்த வித மாற்றமும் செய்யாமல் ரீமேக் செய்திருக்கிறார்கள். இதனால் பேபி ஜான் படத்திற்கு தென் இந்திய ரசிகர்களிடம் இருந்து சுத்தமாக வரவேற்பு கிடைக்கவில்லை. மேலும் இந்தியில் ஒரு சில தரப்பினரை மட்டுமே இப்படம் கவர்ந்துள்ளது. தொடர் தோல்விகளை கொடுத்து வரும் வருன் தவானுக்கு ஒரு பெரிய ஓப்பனிங் கொடுத்த படமாக பேபி ஜானின் முதல் நாள் வசூல் இருந்தது


முதல் நாளில் பேபி ஜான் படம் ரூ.11.25 கோடி வசூலித்தது. இந்த வசூல் அடுத்த நாளில் அப்படியே பாதியாக குறைந்து ரூ 3.90 கோடியாக சரிந்தது. மூன்றாவது நாளில் பேபி ஜான் திரைப்படம் ரூ 3.56 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. 






பேபி ஜான் திரைப்படத்தின் மொத்த பட்ஜெட் ரூ 160 முதல் 180 கோடி என கூறப்படும் நிலையில் முதலீடு செய்த பணத்தில் பாதியை கூட படம் திருப்பி எடுக்க திணறி வருகிறது. இப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அடி எடுத்து வைத்துள்ள அட்லீக்கு முதல் படமே பெரிய அடியாக விழுந்துள்ளது. 





மேலும் படிக்க : புகைப்படக்காரர்களுக்கு ஃபிளையிங் கிஸ்... செலிபிரிட்டி போல் நடந்துகொள்ளும் ஆலியா பட் மகள்...


1000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராஜமெளலியின் அடுத்த படம்..மகேஷ்பாபுவுக்கு நாயகியாக இவரா!