அட்லீ இயக்கியிருக்கும் ஜவான் திரைப்படம் நேற்று முன்தினம் வெளியாகியுள்ளது. ஒரு பக்கம் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வரும் ஜவான் வழக்கம் போல் பல படங்களின் காப்பி என்று ஒரு தரப்பு ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறது.


ஜவான்


ரெட் சில்லி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் அட்லீ இந்தியில் இயக்குநராக அறிமுகமாகியுள்ள படம் ‘ஜவான்’.(Jawan) இந்த படத்தில்  ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு, தீபிகா படுகோனே உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இந்த படம் பாலிவுட், கோலிவுட் திரையிலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


படத்தின் கதை


ரெட் சில்லி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் அட்லீ இந்தியில் இயக்குநராக அறிமுகமாகியுள்ள படம் ‘ஜவான்’.(Jawan) இந்த படத்தில்  ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு, தீபிகா படுகோனே உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இந்த படம் பாலிவுட், கோலிவுட் திரையிலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படியே 30 ஆண்டுகளுக்கு பிறகு என்ற டைட்டில் போட்டு  தற்போதைய காலத்தில்  கதை தொடங்குகிறது.


இந்த பக்கம் ஷாருக்கான் அவருடன் சேர்ந்த 6 பெண்கள் அடுத்தடுத்து அரசுக்கு எதிரான தவறுகளை தட்டிக் கேட்கும் இந்தியன் தாத்தாக்களாக மாறுகின்றனர். தங்கள் தேவைகளாக மக்களுக்கு அவசியமானதை கேட்கிறார்கள். இதனையெல்லாம் அரசாங்கமே செய்ய மறுக்கும் நிலையில் இதையெல்லாம் என்ன ஏதென்று கேட்காமல் அசால்ட்டாக வில்லன் விஜய் சேதுபதி செய்கிறார்.


இதனிடையே ஷாருக் கூட்டத்தை பிடிக்கும் காவல்துறை அதிகாரியாக நயன்தாரா வரும் நிலையில், குற்றவாளி ஷாருக் தான் என தெரிய வருவதற்குள் இருவருக்கும் திருமணம் நடக்கிறது. திருமணம் நடந்த அன்று நடந்ததை சொல்ல ஷாருக் வர, அதற்குள் உண்மை தெரிந்து அவரை நோக்கி நயன்தாரா துப்பாக்கியை நீட்ட, அப்போது இருவரும் எதிர்பாராதவிதமாக வில்லன் கூட்டத்தால் தாக்கப்படுகிறார்கள்.  அங்கு ஷாருக்கை காப்பாற்ற வருகை தருவார் இன்னொரு ஷாருக்கான்.  இதன்பின்னர் இந்த இரண்டு ஷாருக்கான்கள் யார்?.. விஜய் சேதுபதிக்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம்? என்பதை 3 மணி நேரமாக படமாக கொடுத்திருக்கிறார் அட்லீ.


 மீண்டும் பழைய கதையா?


ஒரு பக்கம் இந்தி ரசிகரகள் ஜவான் திரைப்படத்தை ஆகா ஓகோ என்று புகழ்ந்து தள்ளுகிறார்கள். அதே நேரத்தில் தமிழ் ரசிகர்களில் சிலர் படம் சிறப்பாக இருப்பதாக சொன்னாலும் அட்லீ மீது வழக்கமாக வைக்கப்படும் விமர்சனம் ஜவான் திரைப்படத்தின் மீதும் தொடர்கிறது. தமிழில் சங்கர் , முருகதாஸ் இயக்கிய படங்களின் வழக்கமான கதைகளையே சற்று பட்டி டிங்கரிங் செய்து ஜவான் என்கிற படத்தை அட்லீ இயக்கியுள்ளதாக ஒரு தரப்பு ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக முருகதாஸ் இயக்கிய ரமணா படத்தின் கதையை ஜவான் ஒத்திருப்பதாக பலர் தெரிவித்து வருகிறார்கள்.


மேலும் தன்னுடைய பழையப் படங்களான மெர்சல், பிகில் , தெறி உள்ளிட்டப் படங்களில் இருந்தே அட்லீ காட்சிகளை வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அட்லீ மீதான வெறுப்பே இந்த வகையிலான விமர்சனங்களுக்கு காரண்டம் என்று அட்லீ ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.




Jawan Review : கலெக்ஷனா? காப்பியா?.. அட்லீ செய்தது என்ன?.. ஜவான் படம் முழு விமர்சனம் இதோ..!