ஆசிய கோப்பை 2023ல் இன்று (செப்டம்பர் 09) போட்டியின் இரண்டாவது சுப்பர்-4 போட்டி இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ளது. சூப்பர்-4 முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக வங்கதேசம் தோல்வியை சந்தித்துள்ளது.
அத்தகைய சூழ்நிலையில், வங்கதேசம் நிச்சயமாக இந்தப் போட்டியில் வெற்றிபெற்றாக வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கும். மறுபுறம், இது இலங்கைக்கு முதல் சூப்பர்-4 போட்டியாகும். வங்கதேச அணி இலங்கைக்கு எதிரான இந்த போட்டியில் தோற்றால் ஆசியக் கோப்பையிலிருந்து வெளியேறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிடும்.
போட்டி எப்போது..? எங்கே..?
இவ்விரு அணிகளுக்கிடையிலான இந்தப் போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3.00 மணிக்கு தொடங்குகிறது. இப்போட்டியில் இலங்கை அணி இதுவரை குழுநிலையில் இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளது. கடந்த போட்டியில் ஆப்கானிஸ்தானை 2 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சூப்பர்-4ல் இடம் பிடித்தது இலங்கை.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில், இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மெண்டிஸ் 92 ரன்கள் குவித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதேசமயம் பந்துவீச்சில் கசுன் ரஜிதா 10 ஓவர்களில் 79 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்த, தனஞ்சய் டி சில்வா மற்றும் துனித் வெலால்கே ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றி இருந்தனர். இவ்வாறான நிலையில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான போட்டி மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மழை குறுக்கீடு இருக்குமா..?
செப்டம்பர் 9ஆம் தேதி (இன்று) நடைபெறும் போட்டியின் போது கொழும்பில் மோசமான வானிலை எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, மழை பொழிவதற்கு 90 வீதமான வாய்ப்பு உள்ளதால் போட்டி தொடங்க தாமதம் ஆகலாம். போட்டியின் போது மணிக்கு 14 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.
பிட்ச் அறிக்கை:
ஆர் பிரேமதாச மைதானத்தின் ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். இருப்பினும், அங்கு தொடர்ந்து மழை பெய்து வருவதால், ஆரம்ப ஓவர்களில் வேகப்பந்து வீச்சாளர்களும் உதவியாக இருக்கலாம். பந்து பழையதாக மாற, மாற இங்கு ரன்கள் எடுப்பது மிகவும் கடினமாகிறது.
கணிக்கப்பட்ட இலங்கை அணி:
தசுன் ஷனகா (கேப்டன்), திமுத் கருணாரத்னே, குசல் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), சதீர சமரவிக்ரம, சரித் அசலங்க, தனஞ்சய் டி சில்வா, துனித் வெள்ளலகே, மஹிஷ் தீக்ஷனா, கசுன் ராஜித, மதிஷ பத்திரன.
கணிக்கப்பட்ட வங்கதேச அணி:
ஷகிப் அல் ஹசன் (கேப்டன்), முகமது நயீம், மெஹ்தி ஹசன் மிராஜ், லிட்டன் தாஸ், தௌஹீத் ஹ்ரிடோய், முஷ்பிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), ஷமிம் ஹொசைன், அபிஃப் ஹொசைன், தஸ்கின் அகமது, ஷோரிபுல் இஸ்லாம், ஹசன் மஹ்மூத்.