Ashwin Meets Rajni: சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்து இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. 

 

நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், ஒரு போட்டியில் கூட தோல்வியே காணாத இந்திய அணி இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளது. நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் அரையிறுதி போட்டி நடைபெற்றது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த போட்டியை நேரில் காண முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், இங்கிலாந்து முன்னாள் கேப்டன் டேவிட் பெக்காம், பிரபல நடிகர் வெங்கடேஷ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த், இசையமைப்பாளர் அனிருத்தின் தந்தை ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் சென்றிருந்தனர். 

 

விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் நியூசிலாந்தை 70 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி இறுதிபோட்டிக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது. இதில் இந்திய அணியின் ஷமி 7 விக்கெட் கைப்பற்றி வான்கடே மைதானத்தையே தெறிக்கவிட்டார். ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்திய நேற்றைய போட்டியை திரைபிரலங்களும், முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் கண்டு ரசித்தனர். அந்த வகையில் கிரிக்கெட் போட்டியை காண சென்ற ரஜினியை, கிரிக்கெட் வீரர் அஷ்வின் சந்தித்து பேசியுள்ளார். ரஜினியுடன் இணைந்து அஸ்வின் எடுத்து கொண்ட புகைப்படத்தை ரசிகர்கள் இணையதளத்தில் பகிர்ந்து வருகின்றனர். 

 





 

ரஜினியின் ஜெயிலர் படம் வசூலில் சாதனை படைத்து ஹாட்ரிக் வெற்றி பெற்ற நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி கேமியோ ரோலில் நடித்த லால் சலாம் படம் வரும் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது. இதில் மொய்தீன் பாயாக சில நிமிடங்களே வந்தாலும் ஆக்‌ஷன்களில் அதிரடி காட்டியுள்ளார் ரஜினி. இதை தொடர்ந்து ரஜினி நடிக்கும் தலைவர் 170 படத்தின் ஷீட்டிங் தொடங்கி விறு, விறுப்பாக நடந்து வருகிறது. ஞானவேல் இயக்கும் இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து பாலிவுட் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிக்கிறார்.