Dhanush Son Yatra: நடிகர் தனுஷின் 16 வயதான மகன் யாத்ரா ரஜினி வீடு இருக்கும் போயஸ்கார்டன் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வலம் வரும் வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்து டிரெண்டாக்கி வருகின்றனர். 

 

இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகனான தனுஷ் திரை வாழ்க்கையில் தனக்கு என தனி இடத்தை பிடித்துள்ளார். தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், பாலிவுட்டிலும் கலக்கி வருகிறார். முதன் முதலில் அண்ணன் செல்வராகவன் கதையில், அப்பா இயக்கிய துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். அடுத்ததாக அண்ணன் செல்வராகவன் இயக்கிய காதல் கொண்டேன் படத்தில் நடித்த தனுஷ், திருடா திருடி படத்தின் மூலம் பிரபலமானார். தொடர்ந்து காமெடி, ஆக்‌ஷன், காதல் எமோஷனல் கேரக்டர்களில் நடித்த தனுஷ் முன்னணி நடிகராக வலம் வருகிறார். 

 

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் படம் வரும் பொங்கலுக்கு ரிலீசாகும் என அரிவிக்கப்பட்டுள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். வரலாற்று ஜானரில் எடுக்கப்பட்ட கேப்டன் மில்லர் படத்தில் தனுஷுடன் இணைந்து பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன் மற்றும் கன்னட நண்டிகர் சிவராஜ்குமார் நடித்துள்ளார். அதேநேரம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் லால் சலாம் படமும் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது. இந்த படத்தில் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கேமியோ ரோலில் நடித்துள்ளார். 

 

முன்னதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்தை திருமணம் செய்த தனுஷ், 17 ஆண்டுகளுக்கு பிறகு அண்மையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார். இருவரும் தனித்தனியே வாழ்ந்து வரும் நிலையில் பட வேலைகளில் பிசியாக இருந்து வருகின்றனர். இருவரும் பிரிந்து இருந்தாலும், தங்களின் இரு மகன்களை கவனித்து வருகின்றனர். அந்த வகையில், தனுஷின் மூத்த மகனான யாத்ரா 16 வயதாகும் நிலையில் இருசக்கர வாகனத்தில் செல்லும் புகைப்படம் வெளியாகியுள்ளது. 





 

யாத்ராவை செய்தியாளர் வீடியோ எடுக்க முயன்ற போது அவருடன் இருந்த உதவியாளர் தடுத்ததாக கூறப்படுகிறது. 18 வயது நிரம்பாத நிலையில் ஹெல்மெட் போடாமல் தனது மகனை பைக் ஓட்ட தனுஷ் எப்படி அனுமதிக்கிறார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.