பெண் சூப்பர்ஹீரோக்களை கொண்டுவரும் மார்வெல்
சமீப காலங்களில் பெண் சூப்பர்ஹீரோக்கள் ரசிகர்களிடம் அதிகம் வரவேற்பைப் பெற்று வருகிறார்கள். மார்வெலின் பிளாக் விடோ, டி சி யின் வண்டர் வுமன் உள்ளிட்ட கதாபாத்திரங்களை வைத்து எடுக்கப்பட்ட தனிப் படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளன. தற்போது மார்வெல் தன்னுடைய பெண் சூப்பர் ஹீரோக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவெடுத்துள்ளது. சமீபத்தில் திரையரங்கில் வெளியான தி மார்வெல்ஸ் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றுள்ள நிலையில், தங்களுடைய அடுத்த சூப்பர் ஹீரோ டீமை வெளியிட்டுள்ளது மார்வெல்.
டகோடா ஜான்சன்
பிரபல புத்தகமான ஃபிஃப்டி ஷேட்ஸ் ஆஃப் கிரே (fifty shades of grey) நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை டகோடா ஜான்சன். இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘லவ் மி லைக் யூ டு’ பாடல் உள்ளூர் தெருக்களில் திருவிழாவில் ஒளிப்பரப்பாகும் அளவுக்கு ரீச் ஆகியது. இதனைத் தொடர்ந்து ஒரு சில வெற்றிப் படங்களை கொடுத்து வந்த டகோடா ஜான்சன், தற்போது மேடம் வெப் படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார்.
மேடம் வெப்
சிட்னி ஸ்வீனி, எம்மா ராபர்ட்ஸ், டகோடா ஜான்சன், இசபெல்லா பர்ஸ்ட் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள மேடம் வெப் படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகியது. தன்னுடைய வாழ்க்கையில் அடுத்து நடக்க இருக்கும் நிகழ்வுகளை முன்கூட்டியே தெரிந்துகொள்ளும் சூப்பர் பவரை பெறுகிறார் கதாநாயகி.
நான்கு பெண்களை கொலை செய்ய அடையாளம் தெரியாத ஒருவன் வருவதை முன்கூட்டியே பார்க்கும் இவர் அவர்களைக் காப்பாற்ற முயற்சிக்கிறார். விதி இவர்கள் ஐந்து நபர்களையும் ஏன் ஒன்று சேர்க்கிறது . இவர்களைக் கொள்ள வரும் அந்த நபர் யார் என்பதை எதிர்காலத்திற்கு சென்று தெரிந்துகொள்கிறார்.
எதிர்காலத்தில் தங்களது சூப்பர்பவர்களை அடைய இருக்கும் இந்தப் பெண்களை தன்னுடைய செயல்களுக்கு தடையாக கருதும் வில்லன் அவர்களை கொல்ல வருகிறார். அவனை எதிர்த்து இந்த பெண்கள் சண்டையிடுவதே இந்தப் படத்தின் கதையாக இருக்கிறது. மேடம் வெப் திரைப்படம் அடுத்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூடுதலாக இந்தப் படத்தில் புகழ்பெற்ற பாப் பாடகரான பில்லி ஐலீஷின் பாடல் ஒன்றும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : Marvel What If Series: மார்வெல் ரசிகர்கள் காட்டில் மழை.. வாட் இஃப் சீரிஸ் சீசன் 2 - 9 நாட்களில் 9 எபிசோட்கள் : தரமான டிரெய்லர்