பாடகர், பாடலாசிரியர், நடிகர், பாடகர் என பல்வேறு திறமைகளை கொண்டவர் அருண்ராஜா காமராஜ்.  இவருக்கும்  அவரது மனைவி சிந்துஜாவுக்கும் கடந்த மே மாதம் கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலன்றி சிந்துஜா உயிரிழந்தார். இதனையடுத்து அருண்ராஜா காமராஜ் கொரோனா பாதுகாப்பு உடைகளை அணிந்து இறுதி சடங்குகளை மேற்கொண்டார். இது அனைவரையும் சோகக்கடலில் ஆழ்த்தியது. கொரோனா பரவல் அதிகமிருந்த போதும் கூட சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் அந்த இறுதி சடங்கில் பங்கேற்றனர். 


இந்த நிலையில் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் தனது திருமணப்புகைப்படங்களை பதிவிட்ட அருண்ராஜா காமராஜ், திருமணநாள் வாழ்த்துகள் பாப்பி என் பதிவிட்டார். இந்தப்பதிவிற்கு திரைப்பிரபலங்கள் மட்டுமல்லாது, ரசிகர்கள் பலரும் ஆறுதல்களை தெரிவித்து வருகின்றனர். 






தமிழ் திரையுலகில் பாடல்களை  எழுதியும் பாடியும் வந்த அருண்ராஜா காமராஜ் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான  ‘கனா’ படத்தில் அறிமுகமானார். சிவகார்த்திகேயன் தயாரித்த இந்தப்படம் வெற்றியை பெற்ற நிலையில், தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும்  ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தை இயக்கி வருகிறார். இது ஹிந்தியில் வெளியான ஆர்டிகள் 15 படத்தின் ரிமேக் என்பது குறிப்பிடத்தக்கது.  


மேலும் படிக்க..


Radhika Sarathkumar | `மீண்டும் வருவேன்!’ ஹேக் செய்யப்பட்ட ராதிகாவின் ட்விட்டர் அக்கவுண்ட்.. என்ன நடந்தது?


Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..


இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..


Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?


Mental Health | தினமும் Exercise பண்ணுவீங்களா? உங்க மனநலன் பத்தி ஆய்வு சொல்வது என்ன தெரியுமா? ஹெல்த் முக்கியம் பாஸ்..


முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!


Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண