பாலிவுட் ஆடை வடிவமைப்பாளரான மசாபா குப்தா அண்மையில் பகிர்ந்திருந்த ஃபிட்னஸ் போட்டோ ஒன்று அதில் நடிகர் அர்ஜூன் கபூரின் கமெண்ட்டால் தற்போது வைரலாகி வருகிறது. பாலிவுட்டின் பிரபல ஆடை வடிவமைப்பாளர்களில் ஒருவர் மசாபா. ஹவுஸ் ஆஃப் மசாபா என்னும் நிறுவனத்தை அவர் நடத்தி வருகிறார். அவர் பாலிவுட்டின் பல பிரபல நடிகர்களுக்கு நெருங்கிய நண்பர். அவர்களில் ரியா கபூர், அவரது ஒன்று விட்ட சகோதரரும் நடிகருமான அர்ஜூன் கபூரும் ஒருவர். 






அண்மையில் மசாபா பகிர்ந்திருந்த வீடியோ ஒன்றில் அர்ஜூனின் கருத்துதான் தற்போது வைரலாகி வருகிறது. தனது பிட்னஸ் வீடியோ ஒன்றையும் அதன்பிறகு தான் தூங்கும் வீடியோ ஒன்றையும் மசாபா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதன் கீழ், ‘எனக்கு இரண்டே இரண்டு மூட்கள்தான். அதைப் பற்றித் தெரிந்துகொள்ள அடுத்த படத்தைப் பார்க்கவும்’ என நகைச்சுவையாகக் கமெண்ட் செய்துள்ளார். அதற்குக் கருத்து தெரிவித்துள்ள அர்ஜூன் கபூர், ‘இது ரியா வீட்டில் சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும்’ என நையாண்டியாகக் கருத்து கூறியுள்ளார்.


மசாபா தனது பிட்னஸ் மற்றும் யோகா வீடியோக்களை தொடர்ச்சியாகப் பகிர்ந்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.