இயக்குநர் மாரி செல்வராஜ் - நடிகர் துருவ் விக்ரம் இணையும் படம் பற்றிய முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


உறுதியான படம் 


தமிழ் சினிமாவில் 3 படங்கள் இயக்கியிருந்தாலும் முன்னணி இயக்குநராக வலம் வருகிறார் மாரி செல்வராஜ். இவர் தற்போது வாழை என்ற படத்தில் இயக்கியுள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து துருவ் விக்ரம் படத்தை மாரி செல்வராஜ் இயக்கவுள்ளார். விளையாட்டை மையப்படுத்திய இப்படம் பற்றிய நீண்ட நாட்களாகவே வெளிவந்து கொண்டிருந்தது. இந்நிலையில் துருவ் விக்ரம் படத்தை இயக்குநர் பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரிக்கிறார். 


இப்படத்தில் ஹீரோயினாக அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார். அதுமட்டுமல்லாமல் போர் தொழில் படத்தை தயாரித்த அப்ளாஸ் எண்டெர்டெயின்மெண்ட் இந்த படத்தை இணைந்து தயாரிக்கவுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 






மாரி செல்வராஜ் வளர்ச்சி 


இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக இருந்த மாரி செல்வராஜ், 2018 ஆம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இப்படம் மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியது. தொடர்ந்து தனுஷை வைத்து கர்ணன் படத்தை எடுத்தார். உண்மை சம்பவங்களை மையப்படுத்திய மாரி செல்வராஜின் படைப்புகள் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்துவது வழக்கமாகி விட்டது. 


இதனைத் தொடர்ந்து நடிகர் உதயநிதியின் கடைசி படமான மாமன்னன் படத்தை மாரி செல்வராஜ் இயக்கினார். இப்படத்தால் தான் அவர் துருவ் விக்ரமுடன் இணைவது தாமதமானது. இதனிடையே இவர்களது படம் பற்றிய அறிவிப்பு உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.




மேலும் படிக்க: AR Murugadoss: சல்மான்கானுடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்.. அப்ப சிவகார்த்திகேயன் படம்?