சினிமா பையன் அபிஷேக்
பல்வேறு யூடியுப் சானல்களில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து பரவலாக கவனமீர்த்தவர் அபிஷேக் ராஜா. ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய ஓபன் பண்ணா என்கிற யூடியுப் சானலில் ஆங்கர், திரைப்பட விமர்சகராக இருந்து வந்தார். கடந்த பிக்பாஸ் 5 ஆவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட அபிஷேக் முதல் 35 ஆவது நாளில் வெளியேறினார். பின் 48 ஆவது நாளில் வைல்டு கார்டு ரவுண்டில் மீண்டும் உள்ளே வந்து 63 ஆவது நாளில் வெளியேறினார். சினிமா பையன் என்று சமூக வலைதளங்களில் பரவலாக அறியப் படும் அபிஷேக் தீபா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் இடையில் கருத்து வேறு பாடு ஏற்பட்ட காரணத்தில் விவாகரத்து பெற்று பரஸ்பரம் பிரிந்தார்கள்,
இரண்டாம் திருமணம் செய்துகொண்ட அபிஷேக்
கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி தான் காதலிக்கும் பெண் ஸ்வாதி நாகராஜனுடன் புகைப்படம் வெளியிட்டிருந்தார். சினிமா பையன் அபிஷேக் இரண்டாம் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்களில் தலவல்கல் வெளியாகியபடி இருந்தன. இப்படியான நிலையில் இன்று அபிஷேக் ராஜா தான் காதலித்து வந்த ஸ்வாதி நாகராஜன் என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். தனது திருமணம் குறித்த தகவல்களை பெரியளவில் அபிஷேக் ராஜா வெளிப்படுத்தவில்லை. அவரது திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் தமிழ் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
ஜாம் ஜாம்
தில் ராஜூ தயாரிப்பில் அபிஷேக் ராஜா இயக்குநராக அறிமுகமாக இருக்கும் படம் ’ஜாம் ஜாம்’ கடந்த பிப்ரவரி மாதம் இப்படத்தின் அறிவிப்பு வெளியானது. தேனி ஈஸ்வர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் நடிகர்கள் குறித்தான கூடுதல் தகவல்கள் விரைவில் அறிவிக்க பட இருக்கின்றன.