ஜூன் முதல் வாரத்தில் திரையரங்குகளில் நான்கு திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன. சத்யராஜ் , மோகன் வித்தார்த் உள்ளிட்ட நடிகர்கள் நடிப்பில் வெளியாகும் இந்த வார படங்கள் பற்றிய தகவல்களைப் பார்க்கலாம்.


அஞ்சாமை






அறிமுக இயக்குநர் சுப்புராமன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “அஞ்சாமை”. சுப்புராமன் இயக்குநர்கள் லிங்குசாமி, மோகன் ராஜா ஆகிய இருவரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றியவர். ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள அஞ்சாமை படத்தில் விதார்த், வாணி போஜன், ரகுமான், கிருத்திக் மோகன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். ராகவ் பிரசாத் இசையமைத்துள்ளார்.   நீட் தேர்வை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இப்படம் வரும் ஜூன் 2 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.


வெப்பன்






மில்லியன் ஸ்டுடியோஸ் எம்.எஸ்.மன்சூர் தயாரிப்பில் குகன் சென்னியப்பன் இயக்கி இருக்கும் படம் வெப்பன். இதில் வசந்த் ரவி, சத்தியராஜ் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளார்கள். இவர்கள் தவிர ராஜீவ் மேனன், ராஜீவ் பிள்ளை, தன்யா ஹோப், யாஷிகா ஆனந்த், மைம் கோபி, கனிஹா என பலரும் நடித்துள்ளனர். படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சூப்பர் ஹ்யூமன் கான்செப்ட்டை அடிப்படையாக வைத்து ஃபேண்டஸி படமாக உருவாகியிருக்கும் வெப்பன் படம் வரும் ஜூன் 7 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது . 


ஹரா


எஸ் பி மோகன்ராஜ் மற்றும் ஜி மீடியா தயாரிக்கும் ஹரா படத்தை விஜய் ஸ்ரீ இயக்கியுள்ளார் . இபடத்தில் மோகன்  குஷ்பு, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, தீபா, மைம் கோபி, சாம்ஸ், கௌஷிக், அனித்ரா நாயர், மற்றும் சந்தோஷ் பிரபாகர் , சாரு ஹாசன்  உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளார். நீண்ட நாட்களுக்குப் பிறகு மோகனை திரையில் பார்க்க 80ஸ்  மற்றும் 90 ஸ் கிட்ஸ் ஆவலாக காத்திருக்கிறார்கள்.


இனி ஒரு காதல் செய்வோம் 


அரவிந்த் பாலகிருஷ்ணன் தயாரிப்பில் எஸ் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் இனி ஒரு காதல் செய்வோம் . அஜய் பாலகிருஷ்ணன் , ஸ்வேதா ஷ்ரிம்ப்டன் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ரேவா மற்றும் கெவின் இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்கள் . ஜூன் 7 ஆம் தேதி திரையரங்கில் இப்படம் வெளியாக இருக்கிறது