தி கோட் 


தி கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகிறார்கள். படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெறுகிறதோ இல்லையோ முதல் வாரத்திற்கு திரையரங்குகள் திருவிழாக் கோலத்தில் காணப்படும் என்பது மட்டும் உறுதி. வசூல் ரீதியாகவும் இப்படம் தமிழ் சினிமாவில் ஒரு மைல் கல்லாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


தி கோட் படத்தில் ப்ளூப்பர்ஸ்


ஆக்‌ஷன் , காமெடி , ரொமான்ஸ் என பக்கா ஃபேமிலி என்டர்டெயினராக உருவாகியுள்ள இப்படத்திற்கு சென்சார் வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. படத்தின் மொத்த நீளம் 2 மணி நேரம் 59 நிமிடங்கள் என முதலில் முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில் பின் 3 மணி நேரம் மூன்று நிமிடங்கள் என படத்தின் நீளம் அதிகரிக்கப் பட்டுள்ளது. வெங்கட் பிரபு படங்களில் இறுதியில் வருவது போல் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட சொதப்பல்கள், படக்குழு செய்த அட்டகாசங்கள் எல்லாம் இந்த  படத்தின் கடைசியிலும் சேர்க்கப் பட்டிருக்கின்றன. மேலும் விசில் போடு பாடலின் ரீமிக்ஸ் ஒன்றும் பிரேம்ஜி உருவாக்கி இருக்கிறார்.


 நீக்கப்பட்ட காட்சிகளுடன் ஓடிடியில் வெளியாகும் தி கோட்






தி கோட் படத்தில் விஜய் மகனாக நடித்திருக்கும் கதாபாத்திரத்திரம் நிறைய சேட்டைகள் செய்யும் ஒரு கதாபாத்திரமாக உருவாக்கப் பட்டிருக்கிறது. ஆனால் நேரம் காரணமாக நிறைய காட்சிகளை படத்தில் இருந்து நீக்க படக்குழு முடிவு செய்துள்ளது. தி கோட் படத்தின் நீக்கப்பட்ட 18 நிமிட காட்சிகளை படம் வெளியான பிறகு சமூக வலைதளத்தில் வெளியிட இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் நீக்கப்பட்ட ஒட்டுமொத்த காட்சிகளும் படத்தில் சேர்க்கப்பட்டு ஓடிடியில் வெளியாகும் என படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். இந்த தகவல் விஜய் ரசிகர்களுக்கு இரட்டிப்பு உற்சாகத்தை கொடுத்துள்ளது. தி கோட் படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் பெற்றுள்ளது குறிப்பிடத் தக்கது




மேலும் படிக்க : Gnanavel Raja on Rajini: ரஜினியுடன் மோதாமல் இருக்க இதுதான் காரணம்.. ஞானவேல் ராஜா ஓபன் டாக்!


The GOAT: தி கோட் ரிலீஸின்போது கட்சிக்கொடியை பயன்படுத்தக்கூடாது.. ரசிகர்களுக்கு விஜய் அறிவுரை