தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மேகதாது அணையை தடுத்து நிறுத்திடவும் ராசி மணல் அணை கட்டுமானத்தை தமிழ்நாடு அரசு துவங்கிட வேண்டும் என்கின்ற ஒத்த கருத்தை உருவாக்கும் நோக்கத்துடன் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களையும் தமிழக விவசாயிகள் கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் தலைமையில் விவசாயிகள் நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.


இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகையை பி.ஆர் பாண்டியன் தலைமையிலான விவசாயிகள் குழு இன்று நேரில் சந்தித்து ஆதரவு கோரினர்.


இந்த சந்திப்பின்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத்தலைவர் சொர்ணா சேதுராமன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்


இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பி.ஆர் பாண்டியன் ; 


காவிரி நீர் உபரியாக கடல் கடப்பதாக கூறி கர்நாடக அரசாங்கம் சட்டவிரவாதமாக மேகட்டு அணையைக் கட்டி தமிழ்நாட்டிற்கு வரக்கூடிய ஒவ்வொரு நீரை தடுப்பதற்காக முயற்சி எடுக்கின்றனர் நாம் ராசி மணலில் அணை கட்டினால் 64 டிஎம்சி தண்ணீரை தேக்க முடியும் என்று திட்டமிட்டு பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது அதற்குப் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திட்டம் கிடப்பில் இருக்கின்றது


தற்போதைய நிலையில் உலகம் முழுவதிலும் தமிழ்நாடு தண்ணீரை கடலில் கலக்க செய்வதாக உண்மைக்குப் பெருமான இயற்கைக்கு புறம்பான நீதிக்கு எதிரான கருத்துக்களை கர்நாடக முன்வைக்கின்றது எனவே எங்களாலும் ராசி மணலில் பெருந்தலைவர் காமராஜர் பெயரில் அணையை கட்ட முடியும் என்பதை தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஒத்த கருத்தை உருவாக்குகின்ற வகையில் திமுக தலைவர் கலைஞர் அவர்கள் 1987இல் சட்டமன்றத்தில் ராஜீவ் குறித்து அறிவிப்பு செய்த அந்த அதிகாரப்பூர்வ ஆதாரத்தோடு ராசி மணலில் தடுப்பணியை கட்ட வேண்டும் என்பதற்காக அனைத்து கட்சி தலைவர்களையும் சந்தித்து வருகின்றோம் அதன் அடிப்படையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகையை இன்று நேரில் சந்தித்து வலியுறுத்தினம் அவரும் சட்டப்படி இதற்கு வாய்ப்பிருக்குமானால் எங்களது முழு ஆதரவையும் வழங்குகின்றோம் என தெரிவித்துள்ளார்


இதனைத் தொடர்ந்து விசிக, பாமக, தேமுதிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களையும் சந்தித்து ஆதரவு திரட்ட இருக்கின்றோம். நாளை நீர்ப்பாசன துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களை நேரில் சந்தித்து வலியுறுத்த இருக்கின்றோம் முதலமைச்சர் வெளிநாடு இருந்து திரும்பிய பிறகு அடுத்த கட்ட நகர்வு குறித்து முடிவு செய்வோம். நமது மாநில பிரச்சனையை உறுதிப்படுத்துவதற்காக தான் காங்கிரஸ் கட்சித் தலைவரை சந்தித்திருக்கின்றோம். ஆதரவு திரட்டுவதற்காக அனைத்து தலைவர்களையுன் இன்று மாலைக்குள் சந்திக்க இருக்கின்றோம்


அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகை ; 


பி.ஆர் பாண்டியன் தலைமையிலான விவசாயிகள் குழு இன்று காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு வந்து எங்களை நேரில் சந்தித்து ராசி மணல் பகுதியில் அணை கட்ட வேண்டும். 64 டிஎம்சி தண்ணீர் கடலில் வீணாக கலக்கின்றது அந்த அணையை கட்டினால் கிருஷ்ணகிரி மாவட்டம், தர்மபுரி மாவட்டம், கள்ளக்குறிச்சி மாவட்டம் இந்த நீரை பயன்படுத்த முடியும் என்று ஒரு கோரிக்கையை வைத்துள்ளனர். அதே போல் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கும் இது சாதகமாக அமையும் இதை பரிசீலித்து சட்டம் இடம் கொடுத்தால் முதலமைச்சருடன் கலந்து பேசி இதன் சாதக பாதகங்களை விவரித்து உடனடியாக இதனை நிறைவேற்றுவதற்கு காங்கிரஸ் கட்சி துணை நிற்கும்.


புதியதாக ஏதாவது தமிழ் நாட்டுக்கு செய்தால் யாரும் செய்யாததை செய்தால் குறை சொல்வதை எதிர் கட்சிகள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.விளையாட்டை ஊக்குவிக்க வேண்டும் சென்னையில் குறிப்பாக இந்தியாவில் நடக்காத தென்னிந்தியாவில் ஒரு கார் பந்தயத்தை நடத்தி இருக்கின்றார்கள். இது வரவேற்கத்தக்க ஒன்று ஊக்குவிக்கப்பட வேண்டிய ஒன்று.