சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘புஷ்பா’. தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் (டிச.17) உலகமெங்கும் வெளியானது. ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா, சுனில், அஜய் கோஷ், ஹரீஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். 


‘ரங்கஸ்தலம்’ வெற்றிக்குப் பிறகு சுகுமார் இயக்கும் படம், ஹிட் பாடல்கள், சர்ச்சைகள், கடைசி நேர இழுபறி எனப் பெரும் எதிர்பார்ப்புக்கிடைய இப்படம் வெளியானது. சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்கள் வந்தாலும்கூட படம் வசூல் ரீதியாக மெகா ஹிட். இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை Lyca Productions - ஸ்ரீ லட்சுமி மூவிஸ் கைப்பற்றி படத்தை ரிலீஸ் செய்தது. 



மேலும் படிக்க: ஆசியாவின் நம்பர் 1 பணக்காரர் பெருமையை இழந்த முகேஷ் அம்பானி - அப்போ நம்பர் 1 யார்?


அல்லு அர்ஜுன் சினிமா பயணத்தில் இதுவரை 'புஷ்பா' தான் அதிக பொருட்ச்செலவில் எடுக்கப்பட்ட படமாகும். இரண்டு பாகங்களாக வெளியாகும் இந்த படத்திற்கு மைத்ரி மூவி மேக்கர்ஸ் அதிக பொருட்செலவை செய்துள்ளனர். முதல் பாகமான 'புஷ்பா: தி ரைஸ்' படத்தின் தியேட்டர், சாட்டிலைட், டிஜிட்டல் மற்றும் ஆடியோ உரிமைகள் அனைத்தும் சேர்த்து ரூ.250 கோடி ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது.


இந்நிலையில், முதல் பாகத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து இதில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்த அல்லு அர்ஜூன், ரஷ்மிகா மந்தானா ஆகியோர் தங்களது சம்பளத் தொகை பல மடங்கு உயர்த்தியுள்ளதாக டோலிவுட்டில் செய்தி கசிந்திருக்கிறது. தென்னிந்தியா மட்டுமல்லாது, வட இந்தியாவிலும் இந்த படம் சூப்பர் ஹிட்டானதை அடுத்து, இந்திய அளவில் அல்லு அர்ஜூனின் பெயர் பிரபலமடைந்திருக்கிறது. அவருக்கென இருந்த தனி ரசிகர் கூட்டம் இந்திய அளவில் விரிந்திருக்கிறது.


புஷ்பா முதல் பாகத்திற்கு அவருக்கு 30 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கு 32 கோடி ரூபாய் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கதாநாயகி ரஷ்மிகா மந்தானாவிற்கு முதல் பாகத்தில் நடிப்பதற்கு 2 கோடி கொடுக்கப்பட்டது. இப்போது, இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கு 3 கோடி ரூபாய் கேட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. படத்தின் தயாரிப்பாளர்களும் நடிகர்கர்களுக்கு அவர்கள் கேட்கும் சம்பளத்தை தர தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண