தென்னாப்ரிக்காவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நேற்று தொடங்கியது. இதில், டாஸ் வென்ற கேப்டன் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில், முதல் இன்னிங்ஸில் 223 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது இந்திய அணி. அதனை தொடர்ந்து விளையாடிய தென்னாப்ரிக்க அணி,17/1 என்ற நிலையில் 206 ரன்கள் பின்தங்கி இருந்தது.


இந்நிலையில், இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடந்து வருகிறது. தேநீர் இடைவேளை நிலவரப்படி, 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்து தென்னாப்ரிக்க அணி விளையாடி வருகிறது. இந்திய அணி பந்துவீச்சாளர்களைப் பொருத்தவரை, பும்ரா 3 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ், ஷமி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்துள்ளனர்.


உணவு இடைவேளைக்குப் பிறகு வந்த செஷனில் இந்தியா ஆதிக்கம் செலுத்தியது. ஷமி வீசிய ஓவரின்போது, மைதானத்தில் இருந்த நடுவர் அவருக்கு ‘வார்னிங்’ அளித்தார். ’அபாயகரமான பகுதி’ என சொல்லப்படும் நடுப்பகுதியில் ஷமி ஓடி வந்ததால் நடுவர் அவருக்கு எச்சரிக்கை வழங்கினார். இதைப் பார்த்து கொண்டிருந்த கேப்டன் கோலி, நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த வீடியோ நெட்டிசன்களின் பார்வையில் சிக்கி வைரலாகி வருகிறது.










மேலும், ரீப்ளேவில் காண்பிக்கும்போது ஷமி, அபாயப்பகுதியை தொடவில்லை என்பது உறுதியாகி இருக்கிறது. இதனால், கேப்டன் கோலி நடுவரிடம் வாக்குவாதம் செய்திருக்கலாம் என தெரிகிறது.



கிரிக்கெட் வரலாற்றில் தென்னாப்ரிக்கா மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றதில்லை. எனவே, கடைசி டெஸ்ட் போட்டியை வென்று விராட் கோலி தலைமையிலான அணி வரலாறு படைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால், கடைசி டெஸ்ட் போட்டி மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.



மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண