உலகம் முழுவதும் இணைய வளர்ச்சி அடைந்ததைத் தொடர்ந்து, பணப்பரிமாற்றமும் அதற்கேற்றாற்போல வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த வகையில், உலகம் முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக கிரிப்டோகரன்சி மின்னல் வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது.


கிரிப்டோகரன்சி பரிமாற்ற வர்த்தக நிறுவனமாக பைனான்ஸ் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தை சாங்பெங் சாவோ என்பவர் நடத்தி வருகிறார். இவரது நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தில் தவிர்க்க முடியாத நிறுவனமாக உருவெடுத்துள்ளது.




இதனால், இவரது சொத்து மதிப்பு கடந்த சில மாதங்களில் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது. இதன் காரணமாக, ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்ற பெருமையை முகேஷ் அம்பானியிடம் இருந்து தட்டிப்பறித்துள்ளார். இன்றைய நிலையில் அவரது சொத்து மதிப்பு 96.5 பில்லியன் ஆகும். சீன-கனடா வம்சத்தைச் சேர்ந்த சாங்பெங் 2017ம் ஆண்டுதான் பைனான்ஸ் நிறுவனத்தை தொடங்கினார்.  


ரிலையன்ஸ், ஜியோ ஆகிய பெயர்களில் எண்ணெய் நிறுவனங்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் என்று பல நிறுவனங்களை நடத்தி வரும் முகேஷ் அம்பானி இந்தியாவின் நம்பர் 1 பணக்காரராக இருந்தார். 




முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளி தற்போது முதலிடத்தை பிடித்துள்ள சாங்பெங் சுருக்கமாக சி.இசட். என்று அனைவராலும் அழைக்கப்படுகிறார். சீனாவில் பிறந்த இவர் தனது 10 வயதிற்கு பிறகு குடும்பத்தினருடன் கனடாவிற்கு குடிபெயர்ந்தனர். பட்டப்படிப்பிற்கு பிறகு ஜப்பானின் டோக்கியோவில் பங்குச்சந்தையில் பயிற்சி பெற்றார். பின்னர் ப்ளூம்பெர்க் வர்த்த நிறுவனத்தில் பணியாற்றினார்.


2013ம் ஆண்டு முதல் கிரிப்டோகரன்சி வர்த்தகம் குறித்து பல ப்ராஜெக்ட்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். ஓகே காய்ன் என்ற நிறுவனத்தில் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாகவும் பணியாற்றினார். அதன்பின்னரே, 2017ம் ஆண்டு கிரிப்டோகரன்சி பரிமாற்ற நிறுவனமான பைனான்சை தொடங்கினார். சுமார் 96 பில்லியன்களுக்கு அதிபதியான சாங்பெங் தற்போது உலகின் 11வது பெரிய பணக்காரர் ஆவார்.


மேலும் படிக்க : பிரபல டென்னிஸ் வீரரை ஆபாச வார்த்தைகளால் திட்டிய டிவி தொகுப்பாளர்கள்.. இணையத்தில் வைரலான வீடியோ!


மேலும் படிக்க : News Wrap : 11 புதிய மருத்துவ கல்லூரிகள் திறப்பு..! நீட் விலக்கு கோரிய முதல்வர்..! கேப்டவுன் டெஸ்ட்..! இன்னும் பல


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண